உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டங்ஸ்டன் சுரங்க விவகாரம்; திமுக அரசு நாடகம்! | Annamalai | Tungsten mining | DMK

டங்ஸ்டன் சுரங்க விவகாரம்; திமுக அரசு நாடகம்! | Annamalai | Tungsten mining | DMK

டங்ஸ்டன் சுரங்க விவகாரம்; திமுக அரசு நாடகம்! | Annamalai | Tungsten mining | DMK இன்று சட்டசபை கூடிய நிலையில் மதுரையில் டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி தமிழக அரசு தனி தீர்மானம் கொண்டு வர உள்ளது. இந்த சூழலில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முடிவை கைவிடுவது குறித்து பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி உறுதி அளித்தார் என பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கூறி உள்ளார். அவரது அறிக்கை; திமுக அரசின் தவறான, முழுமையற்ற தகவல்களால் மதுரை அரிட்டாபட்டி, நாயக்கர்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இது தொடர்பாக மத்திய சுரங்கத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டிக்கு கடிதம் எழுதியதோடு, போனிலும் அழைத்து பேசினேன். மதுரை அரிட்டாபட்டி, நாயக்கர்பட்டி, கவட்டையம்பட்டி, எட்டிமங்கலம், ஏ.வல்லாளப்பட்டி, கிடாரிப்பட்டி, நரசிங்கம்பட்டி பகுதிகளில் சுரங்கம் அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பது குறித்தும், இந்த முடிவை கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டேன். இது குறித்து பரிசீலிக்கிறேன் என அமைச்சர் உறுதி அளித்துள்ளார். மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பது குறித்து திமுக அரசு தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் மட்டுமே பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மக்கள் எதிர்ப்பை அடுத்து, திமுக அரசு நாடகமாடிக் கொண்டிருக்கிறது. பிரதமர் மோடி விவசாயிகள் நலனுக்கான திட்டங்கள் மட்டுமே செயல்படுத்துவார். எதிரான எந்த செயல்களையும் எடுக்க மாட்டார் என்பது உறுதி என அண்ணாமலை கூறியுள்ளார்.

டிச 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ