திருச்சி மாநகரில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் தனியார் பஸ்களின் அட்டூழியம் | Private Bus | Trichy city
திருச்சி மாநகரில் இயங்கும் தனியார் பஸ்கள் போக்குவரத்து விதிகளை பின்பற்றுவதே இல்லை என்ற குற்றச்சாட்டு அதிகரித்து வருகிறது. டிரைவர் கண்டக்டர்கள் போக்குவரத்து விதிகளை மீறி பேருந்துகளை இயக்குவதாகவும் மாநகரப் பேருந்துகளில் சீட்டில் 40 பயணிகள், நின்றபடி 40 பயணிகள், டிரைவர், கண்டக்டருடன் அதிகபட்சமாக 82 பேர் பயணிக்க முடியும் என்ற நிலையில், 150க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி செல்கின்றனர். பயணிகளின் உயிரை பற்றி கவலைப்படாத தனியார் பஸ் டிரைவர், கண்டக்டர்கள் தகாத வார்த்தையில் திட்டுகின்றனர். சாலையில் டூவீலரில் செல்பவர்களை அச்சுறுத்தும் வகையில் பஸ்களை இயக்குவதால் தினம்தோறும் விபத்துகள் ஏற்பட்டு மரணமும் நிகழ்கிறது. திருச்சி மாநகர தனியார் பஸ் டிரைவர்கள் பணியின்போது போதை வஸ்துகளை பயன்படுத்துவதே விபத்துகளுக்கு காரணம் என புகார் கூறப்படுகிறது.