உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தேர்வு எழுத செல்ல முடியாமல் தவித்த பள்ளி குழந்தைகள் | Cyclone Fengal affect

தேர்வு எழுத செல்ல முடியாமல் தவித்த பள்ளி குழந்தைகள் | Cyclone Fengal affect

தேர்வு எழுத செல்ல முடியாமல் தவித்த பள்ளி குழந்தைகள் | Cyclone Fengal affect | People road block protest | Kottakuppam | Puducherry பெஞ்சல் புயலால் புதுச்சேரியை ஒட்டி உள்ள தமிழக பகுதியான கோட்டகுப்பமும் பாதிப்பை சந்தித்தது. மழை நீர் ஊருக்குள் புகுந்ததால் 2000-க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்ததால் மக்கள் கடும் அவதி அடைந்தனர். ஆனால் இவர்களுக்கு புயல் நிவாரணம் இன்னும் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக மழை நிவாரணம் வழங்க வலியுறுத்தி கிழக்கு கடற்கரை சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஈசிஆரில் 2 பக்கமும் இரண்டு கிலோமீட்டர் தூரத்துக்கு பள்ளி வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களும் அணிவகுத்து நின்றன. சம்பவ இடத்திற்கு வந்த கோட்டகுப்பம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் மக்கள் மறியலை கைவிடவில்லை. இதனால் ஒரு மணி நேரமாக போக்குவரத்து கடுமையாக பாதித்தது. அரையாண்டு தேர்வுக்கு செல்ல வேண்டிய மாணவர்களும் பாதிக்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த கோட்டகுப்பம் டிஎஸ்பி சுனில் பள்ளி மாணவர்கள் பாதிப்பதை போராட்டக்காரர்களிடம் எடுத்து சொன்னார். வருவாய் அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது, அந்த பகுதி மக்களுக்கு நிவாரண பட்டியல் வந்துள்ளதாகவும் விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என உறுதி அளித்தார். அதை ஏற்று அப்பகுதி மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

டிச 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி