கனிம நிலங்களுக்கு வரி, கேளிக்கை வரி உள்ளிட்ட மசோதா நிறைவேற்றம் | New bills | TN Assembly
தமிழக சட்டசபை 9ம் தேதி கூடிய நிலையில் ஏற்கனவே அறிவித்தபடி 2 நாட்கள் மட்டுமே நடந்தது. 2வது நாளான நேற்று 19 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. கனிம வளங்கள் உள்ள நிலங்களுக்கு, அதில் இருந்து கிடைக்கும் கனிமங்களுக்கு ஏற்ப, வரி விதிக்கும் சட்ட மசோதாவை, நீர்வள அமைச்சர் துரைமுருகன் நேற்று தாக்கல் செய்தார். இதற்கு அதிமுக எம்எல்ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி எதிர்ப்பு தெரிவித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ நாகை மாலி, இந்த சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார். அதற்கு பதில் அளித்த அமைச்சர் துரைமுருகன், இந்த சட்ட திருத்தத்தின்படி, கனிம வளங்கள் உள்ள நிலங்களுக்கு வரி விதிக்கும்போது, மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதபடி வரிகள் நிர்ணயிக்கப்படும் என்றார். அதைத்தொடர்ந்து குரல் ஓட்டெடுப்பு மூலம் சட்ட மசோதா நிறைவேறியது