உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கோவில்பட்டியை உலுக்கிய சிறுவன் மர்ம மரணம் |Boy Missing case|Body found|Mystery in dead|Kovilpatti

கோவில்பட்டியை உலுக்கிய சிறுவன் மர்ம மரணம் |Boy Missing case|Body found|Mystery in dead|Kovilpatti

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்தி நகரை சேர்ந்தவர்கள் முருகன் - பாலசுந்தரி தம்பதி. முருகன் கட்டிட தொழிலாளி. பாலசுந்தரி தீப்பெட்டி ஆலையில் வேலை செய்கிறார். இவர்களுக்கு மணிகண்டன், கருப்பசாமி என்ற 2 மகன்கள் உள்ளனர். மணிகண்டன் அங்குள்ள நகராட்சி பள்ளியில் 7ம் வகுப்பு படிகிறான். அதே பள்ளியில் கருப்பசாமி 5ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த சில நாட்களாக உடல்நிலை சரி இல்லாததால் கருப்பசாமி பள்ளிக்கு போகவில்லை என கூறப்படுகிறது. திங்களன்று பெற்றோர்கள் வேலைக்கும், சகோதரன் பள்ளிக்கும் சென்று விட சிறுவன் கருப்பசாமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளான். மதியம் வீட்டுக்கு வந்த பெற்றோர், கருப்பசாமி இல்லாததால் அதிர்ச்சி அடைந்தனர். பல இடங்களில் தேடியும் சிறுவன் கிடைக்காததால் கோவில்பட்டி மேற்கு போலீசில் புகார் அளித்தனர். உடனடியாக காந்தி நகருக்கு விரைந்த போலீசார், சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தும் துப்பு கிடைக்காததால், மூன்று தனிப்படைகள் அமைத்து சிறுவனை தேடி வந்தனர். நேற்று காலை அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் சிறுவன் கருப்பசாமி மூச்சு பேச்சின்றி கிடந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

டிச 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை