உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆம்ஸ்ட்ராங் வழக்கில் திடுக்கிடும் திருப்பம் | Armstrong Case | Armstrong Case High Court

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் திடுக்கிடும் திருப்பம் | Armstrong Case | Armstrong Case High Court

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் திடுக்கிடும் திருப்பம் | Armstrong Case | Armstrong Case High Court பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ம் தேதி பெரம்பூரில் வெட்டி கொல்லப்பட்டார். கொலையில் தொடர்புடைய ரவுடி பொன்னை பாலு, ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி, தோட்டம் சேகரின் மனைவி மலர்க்கொடி, பிரபல ரவுடி நாகேந்திரன் மகன் அஸ்வத்தாமன் உட்பட 28 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் ரவுடி திருவேங்கடம், சீசிங் ராஜா போலீசாரால் என்கவுன்டர் செய்யப்பட்டனர். என்கவுன்டர் செய்யப்பட்டவர்களை தவிர்த்து எஞ்சிய நபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது போலீசார் குற்ற பத்திரிகை தாக்கல் செய்தனர். 4,832 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை எழும்பூர் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்ததை எதிர்த்து கைதானவர்கள் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்குகள் ஐகோர்ட் நீதிபதிகள் சுப்ரமணியம், ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் குமரேசன் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு சென்னை ஐகோர்ட் வளாகத்திற்குள் கொண்டு வரப்பட்டு கைமாற்றப்பட்டது என கூறினார். கொலை பின்னணியில் பல சதி செயல்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நீதிபதிகள் கோர்ட் வளாகத்தில் வெடிகுண்டு எப்படி கொண்டுவரப்பட்டது என்று கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக தனியாக விசாரணை நடத்தவும் போலீசுக்கு உத்தரவிட்டனர். ஆம்ஸ்ட்ராங் வழக்கில் தொடர்புடைய அனைத்து மனுக்கள் மீதான விசாரணைகளையும் ஜனவரி முதல் வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

டிச 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை