உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / உடற்பயிற்சி கூடத்தை உருத்தெரியாமல் ஆக்கிய குடிமகன்கள்! Public Property Damage | Kodaikanal

உடற்பயிற்சி கூடத்தை உருத்தெரியாமல் ஆக்கிய குடிமகன்கள்! Public Property Damage | Kodaikanal

உடற்பயிற்சி கூடத்தை உருத்தெரியாமல் ஆக்கிய குடிமகன்கள்! Public Property Damage | Kodaikanal திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மூஞ்சிக்கல்லில் அரசு பள்ளிக்கு சொந்தமான விளையாட்டு மைதானம் உள்ளது. அங்கு கொடைக்கானல் அளவிலான விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்து வந்தது. நாளடைவில் மைதானம் பராமரிப்பின்றி ஆக்கிரமிப்பால் சுருங்க துவங்கியது. மைதானத்தை மீட்டு மேம்படுத்த வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில் 2011ம் ஆண்டு பார்வையாளர் கூடம் மற்றும் உடற்பயிற்சி மையம் உள்ளிட்டவை 50 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டது. தற்போது பராமரிப்பின்றி மீண்டும் மைதானம் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பும் அதிகரித்துள்ளது. உடற்பயிற்சி கூடம் மது அருந்தும் பாராகவும், சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறியுள்ளது. உடற்பயிற்சி கூடத்தின் ஜன்னல் உடைக்கப்பட்டு உள்ளே இருந்த விலை உயர்ந்த உபகரணங்கள் அனைத்தும் சேதப்படுத்தப்பட்டும், திருடப்பட்டும் உள்ளது. மீண்டும் மைதானத்தை தரம் உயர்த்தி, உடற்பயிற்சி கூடத்தை பராமரித்து செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டிச 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !