தனுஷ் சர்ச்சைக்கு பின் விக்னேஷால் புதிய பரபரப்பு director-vigneshsivan meets Puducherry minister
தனுஷ் சர்ச்சைக்கு பின் விக்னேஷால் புதிய பரபரப்பு director-vigneshsivan meets Puducherry minister K. LAKSHMINARAYANAN actress-nayanthara Puducherry government Sea Gulls Restaurant 2012ல் வெளியான போடா போடி படம் மூலம் இயக்குனரானவர் விக்னேஷ் சிவன். நடிகை நயன்தாராவின் காதல் கணவர். நயன்தாராவின் டாக்குமென்டரி படம் கடந்த மாதம் ஓடிடியில் வெளியானது. தனுஷின் நானும் ரவுடிதான் பட விஷுவல்களை டாக்குமென்டரியில் பயன்படுத்தியதால், விக்னேஷ் சிவன், நயன்தாரா தம்பதிக்கும் தனுஷக்கும் பிரச்னை ஏற்பட்டது. 10 கோடிரூபாய் நஷ்ட ஈடு கேட்டு ஐகோர்ட்டில் தனுஷ் வழக்கு போட்டுள்ளார். இப்போது மீண்டும் விக்னேஷ் சிவன் பரபரப்பை கிளப்பியுள்ளார். நேற்று மாலை புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் பொதுப்பணி மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் லட்சுமி நாராயணனை சந்தித்து பேசினார். புதுச்சேரி கடற்கரை சாலையில் அரசின் சுற்றுலா துறைக்கு சொந்தமான சிகல்ஸ் ஓட்டலை தான் ஏற்று நடத்த விரும்புவதாக கூறினார். விலைக்கோ அல்லது குத்தகைக்கோ வழங்க முடியுமா? அதற்கு அரசின் அனுமதி கிடைக்குமா? என விக்னேஷ் சிவன் கேட்டார். அதற்கு அமைச்சர் சிகல்ஸ் ஓட்டல் அரசுக்கு சொந்தமானது என்றார். பல ஊழியர்கள் வேலை பார்க்கிறார்கள்; தற்போது நல்ல நிலையில் லாபத்துடன் இயங்கிக் கொண்டிருக்கிறது. அதனை தனியாரிடம் ஒப்படைக்க முடியாது என்றார். உடனே புதுச்சேரியில் கடற்கரைகளை தனியார் நிறுவனங்கள் நடத்துகின்றன. ஏதேனும் ஒன்றை ஒப்பந்த அடிப்படையில் தனக்கு வழங்கும்படி கேட்டார். புதுச்சேரியில் உள்ள ஈடன், மெரினா உள்ளிட்ட கடற்கரைகள், ஒப்பந்த அடிப்படையில் 2017 ம் ஆண்டே தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது; அதனால் இப்போதைக்கு அதற்கு வாய்ப்பில்லை என அமைச்சர் லட்சுமி நாராயணன் தெரிவித்தார். விக்னேஷ் சிவன் கேட்ட 2 கோரிக்கைகளுக்கும் அமைச்சர் கைவிரித்துவிட்ட நிலையில், 3வதாக இன்னொரு கோரிக்கையை முன்வைத்தார். புதுச்சேரியில் இசை நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தவாவது ஏதேனும் இடம் கிடைக்குமா? என விக்னேஷ் சிவன் கேட்டார். பழைய துறைமுக வளாகத்தில் 4 ஆயிரம் பேர் அமரும் வகையில் திறந்தவெளி பொழுதுபோக்கு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த இடத்திற்கான கட்டணத்தை வரியுடன் சேர்த்து நகராட்சியிடம் செலுத்தினால் கலை நிகழ்ச்சிகளை நடத்தி கொள்ளலாம்; அங்கு நீங்கள் எத்தனை நாள் வேண்டுமானனாலும் கலைநிகழ்ச்சி நடத்த முடியும் என, அமைச்சர் தெரிவித்தார். இதையடுத்து, இயக்குனர் விக்னேஷ் சிவன் பழைய துறைமுக வளாகத்திற்கு சென்றார். திறந்தவெளி மைதானத்தை பார்வையிட்டு பிறகு சென்னை புறப்பட்டு சென்றார்.