அமரன் மாபெரும் வெற்றி: நன்றி சொன்ன கார்த்திகேயன் actor Sivakarthikeyan
அமரன் மாபெரும் வெற்றி: நன்றி சொன்ன கார்த்திகேயன் actor Sivakarthikeyan kamal haasan amaran super hit Rajkumar Periasamy Thiruthani Murugan Temple சிவகார்த்திகேயன் நடிப்பில் கமல்ஹாசன் தயாரித்த அமரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடந்த சண்டையில் வீரமரணமடைந்த ராணுவ அதிகாரி முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட அமரன் படம், அனைத்து தரப்பினரின் அமோக ஆதரவுடன் 350 கோடி ரூபாய் வசூல் சாதனையை படைத்தது. ஓடிடியிலும் ரிலீசாகி, இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளது. தனது திரை வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த அமரன் படத்தின் வெற்றிக்கு நன்றி சொல்லும்விதமாக, திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிவகார்த்திகேயன் கொட்டும் மழையில் சாமி தரிசனம் செய்தார். கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பிரசாதங்கள் மற்றும் மாலைகள் வழங்கப்பட்டது. சாமி தரிசனம் செய்த பிறகு சிவகார்த்திகேயனுடன் ரசிகர்கள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.