உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / விமானங்கள் ரத்து: சென்னையை மிரட்டும் கனமழை | Chennai Airport | Flight Cancel

விமானங்கள் ரத்து: சென்னையை மிரட்டும் கனமழை | Chennai Airport | Flight Cancel

விமானங்கள் ரத்து: சென்னையை மிரட்டும் கனமழை | Chennai Airport | Flight Cancel வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து நகர்ந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. 21 சென்டி மீட்டருக்கும் அதிகமாக மழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் விடிய விடிய தொடரும் மழையால் ஏரிகள் வேகமாக நிரம்பி வருகிறது. கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் சென்னையில் இருந்து புறப்படும் 3 விமானங்கள், சென்னைக்கு வரும் 3 விமானங்கள் என மொத்தம் 6 விமான இயக்கத்தை ஏர் இந்தியா ரத்து செய்துள்ளது. சென்னை ஏர்போர்ட்டில் பயணிகள் சோதனை செய்யும் இடத்தில் கனமழையால் மழை நீர் உள்ளே புகுந்து அங்குள்ள மின் விளக்குகள் வழியாக தண்ணீர் அருவி போல கொட்டுகிறது. ஏர்போர்ட் வெளியே பயணிகள் உள்ளே வரும் பகுதி முழுவதும் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

டிச 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை