உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தண்ணீர் இல்லாமல் தவித்த நெல்லை அரசு மருத்துவமனை | Thamirabarani river | Water Shortage | Nellai GH

தண்ணீர் இல்லாமல் தவித்த நெல்லை அரசு மருத்துவமனை | Thamirabarani river | Water Shortage | Nellai GH

தண்ணீர் இல்லாமல் தவித்த நெல்லை அரசு மருத்துவமனை | Thamirabarani river | Water Shortage | Nellai GH திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் பெய்த தொடர் கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் குடிநீர் ஏற்று பம்பிங் ஸ்டேஷன்களில் குழாய் உடைப்பு ஏற்பட்டது. பழுதுபார்க்கும் பணி நடப்பதால் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கும் குடிநீர் சப்ளையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திருநெல்வேலி அரசு மருத்துவமனையிலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு நோயாளிகள் அவதி அடைந்துள்ளனர். நேற்று முதல் அங்கு குடிநீர் சப்ளை பாதிக்கப்பட்டு டயாலிசிஸ் நோயாளிகள் உட்பட பலர் தவிக்கின்றனர். மாநகராட்சி நிர்வாகம் சார்பில் லாரிகளில் குடிநீர் கொண்டு வரப்பட்டு நிலைமையை சரி செய்து வருகின்றனர்.

டிச 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ