மீண்டும் நடந்த சம்பவம்! 3 அறைகள் தரைமட்டம் | firecracker factory | Virudhunagar
மீண்டும் நடந்த சம்பவம்! 3 அறைகள் தரைமட்டம் | firecracker factory | Virudhunagar விருதுநகர், சாத்தூரை அடுத்த செவல்பட்டி கிராமத்தில் கருப்பசாமி என்பவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை இயங்கி வருகிறது. சென்னை உரிமம் பெற்ற இந்த ஆலையில் இன்று 30 தொழிலாளர்கள் பணியில் இருந்தனர். மதிய உணவு இடைவேளைக்கு பின் பணிக்கு திரும்பிய போது எதிர்பாராத விதமாக ரசாயன மூலப்பொருள் வைக்கப்பட்ட அறையில் வெடி விபத்து ஏற்பட்டது. ஊழியர்கள் அனைவரும் அலறியடித்து ஆலையை விட்டு வெளியேறினர். நல்வாய்ப்பாக ஊழியர்களுக்கு காயமின்றி பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. 3 அறைகள் தரைமட்டமானது. அதனருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களும் சேதமடைந்தன. 3 தீயணைப்பு வாகனங்களில் வந்து தீ மேலும் பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர். விபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.