உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 2025ல் NTAவில் வருகிறது பெரிய மாற்றம்! | NTA | Education Minister Dharmendra Pradhan | NEET Exam

2025ல் NTAவில் வருகிறது பெரிய மாற்றம்! | NTA | Education Minister Dharmendra Pradhan | NEET Exam

2025ல் NTAவில் வருகிறது பெரிய மாற்றம்! | NTA | Education Minister Dharmendra Pradhan | NEET Exam நீட் உள்ளிட்ட முக்கிய போட்டித் தேர்வுகளில் முறைகேடு நடந்தது நாடு முழுதும் அதிர்ச்சியை தந்தது. போட்டித் தேர்வுகளை சீரமைக்கும் நோக்கத்துடன் இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.ராதாகிருஷ்னன் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழு பல்வேறு சீர்திருத்தங்கள் குறித்து விவாதித்த நிலையில், 101 பரிந்துரைகளை அளித்துள்ளதாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது; உயர்நிலை குழுவின் அறிக்கை சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 2025ல் தேசிய தேர்வு முகமை முற்றிலுமாக மாற்றப்படும். பத்து புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும். 2025 முதல் உயர்கல்வி நிறுவனங்களுக்கான நுழைவு தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தும். ஆட் சேர்ப்புத் தேர்வுகளை நடத்தாது. சைபர் கிரைம் குற்றங்கள் ஒரு பெரிய சவாலாக உள்ளது. இது மாறும் வகையில் தீர்வு காண வேண்டும். அதே போல் இளங்கலை நீட் நுழைவுத் தேர்வை பேனா, பேப்பர் அடிப்படையில் நடத்துவதா அல்லது ஆன்லைனில் நடத்துவதா என்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளுக்கு விரைவில் தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றார். ஆன்லைன் மூலம் நீட் தேர்வு எழுதுவது குறித்து ஆலோசனை நடப்பதாக கல்வித் துறை அமைச்சர் கூறியிருப்பது கவனம் பெற்றுள்ளது.

டிச 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ