உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாஜ எம்பி மண்டை உடைந்தது: பரபரப்பு தகவல் Parliament adjourned | Lok Sabha

பாஜ எம்பி மண்டை உடைந்தது: பரபரப்பு தகவல் Parliament adjourned | Lok Sabha

பாஜ எம்பி மண்டை உடைந்தது: பரபரப்பு தகவல் Parliament adjourned | Lok Sabha | Rajya Sabha| Congress BJP Protest Over Ambedkar Issue அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் பேசியதாக மத்திய அமைச்சர் அமித் ஷா மீது காங்கிரஸ் குற்றம்சாட்டுகிறது. காங்கிரஸ் உள்ளிட்ட இண்டி கூட்டணி கட்சிகள் அமித் ஷாவை மன்னிப்பு கேட்க வலியுறுத்தி அமளி துமளியில் ஈடுபட்டு நேற்று பார்லிமென்ட்டை முடக்கின. காங்கிரசின் குற்றச்சாட்டை மோடி மறுத்தார். அம்பேத்கர் உயிருடன் இருந்த போதும், அவரது இறப்புக்கு பிறகும் அவரை அவமதித்து, புறக்கணித்தது காங்கிரஸ் தான் என, பிரதமர் மோடி காட்டமாக பதிலடி கொடுத்தார். தன் பேச்சின் ஒரு பகுதியை மட்டும் வெட்டி ஒட்டி திரித்து அரசியல் ஆதாயம் தேடப்பார்ப்பதாக காங்கிரசை அமித் ஷா குற்றம்சாட்டினார். இந்நிலையில் அமித் ஷா பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, பார்லிமென்ட் கேட்டில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கையில் அம்பேத்கர் படத்தை ஏந்தி ஜெய் பீம் கோஷம் எழுப்பினர். அதே சமயம், அம்பேத்கரை தேர்தலில் தோற்கடித்து அவரை அவமதித்து, புறக்கணித்ததாக காங்கிரஸ் மீது குற்றம்சாட்டி கோஷம் முழங்கியபடி அந்த இடத்துக்கு சில பாஜ எம்பிக்கள் கூட்டமாக வந்தனர். அப்போது, ஏற்பட்ட தள்ளு முள்ளில் பாஜ எம்பி பிரதாப் சந்திர சாரங்கி கீழே விழுந்தார். அதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்தம் சொட்ட சொட்ட அவரை வீல் சேரில் அமர்த்தி சக எம்பிக்கள் மற்றும் பார்லிமென்ட் ஊழியர்கள் ஆஸ்பிடலுக்கு அனுப்பி வைத்தனர். பார்லிமென்ட் வளாகத்தில் உள்ள படிக்கட்டில், அமளியில் ஈடுபட்ட ஒரு எம்பியை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் தள்ளிவிட்டதாகவும், அந்த எம்பி தன் மீது விழுந்ததால் தான் கீழே விழுந்து மண்டை உடைந்ததாகவும் சாரங்கி கூறினார். பார்லிமென்ட் வளாகத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் எம்பி ஒருவரின் மண்டை உடைந்த சம்பவம் பார்லிமென்ட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

டிச 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை