அமித்ஷா பேச்சை திசை திருப்பும் முயற்சி என ஆம் ஆத்மி குற்றச்சாட்டு |Lieutenant Governor
அமித்ஷா பேச்சை திசை திருப்பும் முயற்சி என ஆம் ஆத்மி குற்றச்சாட்டு |Lieutenant Governor| VK Saxena|Granted Nod| Prosecute Kejriwal| டில்லியில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் மூன்று முறை முதல்வராக இருந்துள்ளார். கடந்த மார்ச் 21ல் அவர், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்து திகார் சிறையில் அடைக்கப்பட்டார். செப்டம்பரில் ஜாமினில் வெளியே வந்த பிறகு முதல்வர் பதவியை கெஜ்ரிவால் ராஜினாமா செய்தார். அமைச்சர் ஆதிஷியை முதல்வராக்கினார். கெஜ்ரிவால் மீது பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழும் அமலாக்கத்துறை ஒரு வழக்கு பதிவு செய்திருந்தது. அது குறித்து விசாரணை நடக்கவில்லை. அரசு பொறுப்பில் இருப்பவர்கள் மீது விசாரணை நடத்த கவர்னரின் அனுமதி பெற வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்பால், அமலாக்க துறையால் கெஜ்ரிவாலை விசாரிக்க முடியாத நிலை இருந்தது. டில்லி கவர்னரின் அனுமதி கோரி அமலாக்கத்துறை கடிதம் எழுதியது. கவர்னர் வி.கே.சக்சேனா முன் விசாரணையில் இருந்த அந்த கோப்புக்கு இப்போது அனுமதி கிடைத்துள்ளது. 2025 பிப்ரவரியில் டில்லி சட்டசபைக்கு தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ள கெஜ்ரிவால் முன் தயாரிப்பு பணிகள் செய்து வருகிறார். வேட்பாளர்கள் பட்டியலையும் வெளியிட்டு வருகிறார். இந்த சூழலில் அவரை விசாரிக்க அமலாக்க துறைக்கு கவர்னர் அனுமதி வழங்கியிருப்பது முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் இதை மறுத்துள்ள டில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, அம்பேத்கர் பற்றிய அமித்ஷாவின் பேச்சை திசை திருப்பும் முயற்சி என குற்றம் சாட்டியுள்ளார். கவர்னர் ஒப்புதல் கொடுத்தது உண்மை என்றால் ஒப்புதல் கடிதத்தின் நகலை அமலாக்கத்துறை வெளியிடாதது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.