உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திமுகவினருக்கு பட்டா வழங்க திட்டமிடுவதாக அதிமுக எம்எல்ஏ குற்றச்சாட்டு! Free Patta | Senthilbalaji

திமுகவினருக்கு பட்டா வழங்க திட்டமிடுவதாக அதிமுக எம்எல்ஏ குற்றச்சாட்டு! Free Patta | Senthilbalaji

திமுகவினருக்கு பட்டா வழங்க திட்டமிடுவதாக அதிமுக எம்எல்ஏ குற்றச்சாட்டு! Free Patta | Senthilbalaji | Minister | Mettupalayam கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தாலுகாவில் வீடு இல்லாத ஆதிதிராவிட மக்களுக்கு வருவாய் துறை சார்பில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. 2016ல் 25 பேரும், 2023ல் 60 பேரும் வீட்டு மனை பட்டா பெற்றனர். ஆனால் அவர்களுக்கான இடம் தேர்வு செய்து வழங்காமல் இழுத்தடிப்பு செய்து வருகின்றனர். பட்டா பெற்றவர்கள் பலமுறை கேட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள், இடத்தை அளவீடு செய்து தர வலியுறுத்தி மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டம் நடத்தினர். அவர்களிடம் மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் வாசுதேவன் மற்றும் அதிமுக எம்எல்ஏ ஏகே செல்வராஜ் பேச்சு நடத்தினர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இடம் வழங்காமல் திமுக அரசு இழுத்தடிப்பதாகவும், கோவை பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி தலையீடு உள்ளதாகவும் எம்எல்ஏ செல்வராஜ் கூறினார். ஊராட்சியில் அதிமுகவினரின் பதவி காலம் முடிந்ததும், திமுகவினருக்கு பட்டா வழங்க திட்டமிட்டு செயல்படுவதாகவும் அவர் புகார் கூறினார்.

டிச 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ