கோயிலுக்கு செல்லும் வழியில் நடந்த அதிர்ச்சி சம்பவம் young girl dies vaniyambadi Tirupathur
கோயிலுக்கு செல்லும் வழியில் நடந்த அதிர்ச்சி சம்பவம் young girl dies vaniyambadi Tirupathur district Arcot police crime திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வெங்கடாபுரம் பகுதியை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட பக்தர்கள் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு தனியார் பஸ்சில் நேற்றிரவு புறப்பட்டனர். ஆற்காடு முப்பதுவெட்டி அருகே டீ குடிப்பதற்காக அதிகாலையில் பஸ்சை சாலையோரம் டிரைவர் ஓரங்கட்டி நிறுத்தினார். எல்லாரும் இறங்கி விட்டனர். அகல்யா (20) என்ற இளம்பெண் மட்டும் பஸ்சில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, காற்று வேகமாக அடித்ததால் மேலே சென்ற மின்கம்பி பஸ்சின் கூரையில் உரசியுள்ளது. பஸ் முழுக்க மின்சாரம் பாய்ந்தது. ஜன்னலில் சாய்ந்து தூங்கிக் கொண்டிருந்த அகல்யா மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அலறல் சத்தம் கேட்டு பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதனர். மின் இணைப்பை துண்டித்த பிறகு, அகல்யாவின் உடலை போலீசார் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடலை மீட்டபோது கதறி அழுத அகல்யாவின் தாய் மயங்கி விழுந்தார். அவரும் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பற்றி ஆற்காடு நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் மேல்மருவத்தூர் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய பஸ்சில் புறப்பட்ட இளம்பெண் மின்சாரம் தாக்கி இறந்ததால் பக்தர்கள் கண்ணீருடன் வீடு திரும்பினர். அவ ஒருத்தி உயிர விட்டு எங்க எல்லாரையும் தெய்வம்போல காப்பாத்திட்டா? என மற்ற பக்தர்கள் உருக்கத்துடன் கூறினர்.