அதிகாரிகளை 'கொசு தொல்லை' என்ற அமைச்சர்! | Minister Nasar | DMK | Porur | Food Safety Department
அதிகாரிகளை கொசு தொல்லை என்ற அமைச்சர்! | Minister Nasar | DMK | Porur | Food Safety Department தமிழக உணவு பாதுகாப்புத்துறை சார்பில் சாலையோர உணவு வணிகர்களுக்கான விழிப்புணர்வு மற்றும் பதிவு சான்று வழங்கும் நிகழ்ச்சி போரூரில் நடந்தது. சிறுபான்மையினர் நலன் அமைச்சர் நாசர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். திருவள்ளூரை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேலான வியாபாரிகள் காலை 10 மணிக்கு அரங்கத்தில் கூடினர். பதிவு சான்று வழங்கி அமைச்சர் கூறும் அறிவுரைகளை கேட்டு செல்லுமாறு அதிகாரிகள் கூறியுள்ளனர். 3.30 மணிக்கு அமைச்சர் பேச துவங்கினார். மதிய உணவு கொடுக்கப்படாததால் பசி மயக்கத்தில் பலர் எழுந்து செல்ல ஆரம்பித்தனர். கிளம்பிய வியாபாரிகளை அமைச்சர் பேசி முடிக்கும் வரை இருக்குமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தடுத்தனர். ஒரு சிலருக்கு மட்டும் திண்பண்டங்கள் வழங்கப்பட்டதாகவும், உணவு பாதுகாப்பு துறை ஏற்பாடு செய்த நிகழ்ச்சியிலேயே உணவு வழங்கப்படாதது பலருக்கு அதிருப்தியை தந்தது. அமைச்சர் பேசிய போதும் பின்னால் இருந்த அதிகாரிகள் பேசிக்கொண்டிருந்ததால் கோபமானார். எந்தவித முன்னறிவிப்பும் இல்லை. எனக்கு சான்றிதழும் கொடுக்கவில்லை என சாலையோர பெண் வியாபாரி ஒருவர் வருத்தம் தெரிவித்தார். உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நிருபர்களை வீடியோ எடுக்க விடாமல் தடுத்தனர்.