கவர்னர் உத்தரவுப்படி டில்லி போலீசார் அதிரடி door-to-door|verification drive|against|illegal bangla
கவர்னர் உத்தரவுப்படி டில்லி போலீசார் அதிரடி door-to-door|verification drive|against|illegal bangladeshi| வங்க தேசத்தில் சிறுபான்மையினராக வசிக்கும் இந்துக்கள் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர். டில்லியில் உள்ள முஸ்லிம் தலைவர்கள் மற்றும் உலமாக்கள் கவர்னர் விகே சக்சேனாவை சந்தித்து, இது குறித்து கவலை தெரிவித்தனர். வங்கதேசத்தில் இருந்து சட்ட விரோதமாக டில்லியில் குடியேறி வசித்துவருவோர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். டில்லியில் சட்ட விரோதமாக குடியேறிய வங்கதேச நாட்டவரை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்கும்படி தலைமை செயலருக்கும், போலீஸ் ஆணையருக்கும் கவர்னர் சக்சேனா உத்தரவிட்டார். கடந்த 11ம் தேதியில் இருந்து டில்லி போலீசாரும் அதிகாரிகளும் பல்வேறு பகுதிகளில் வீடு வீடாக சென்று சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த 12ம் தேதி 32 பேரும், 13ம் தேதி ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களும் சட்ட விரோதமாக டில்லியில் குடியேறியது கண்டுபிடிக்கப்பட்டனர் அவர்களிடம் ஆவணங்கள் இல்லை. வங்கதேச நாட்டினர் அளித்த ஆவணங்களை சரிபார்க்கும் பணிகளும் வேகமாக நடந்து வருகின்றன. தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று டில்லி போலீசார் எச்சரித்தனர். நேற்று காலை 6 மணி முதல் நடந்த சோதனையில் 175 வங்கதேச நாட்டினர் சட்டவிரோதமாக குடியேறியது தெரியவந்தது. தொடர்ந்து 2 மாதங்களுக்கு வீடு வீடாக சோதனை நடைபெற இருக்கிறது. பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையின்போது வழங்கப்படும் ஆவணங்களை சரிபார்த்து, சட்ட விரோதமாக வங்க தேசத்தவர்கள் டில்லியில் வசிக்கின்றனரா என்பதை தெரிவிக்கும்படி டில்லி மாநகராட்சி பள்ளி நிர்வாகங்களுக்கு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். அடுத்த ஆண்டு பிப்ரவரியில் டில்லி சட்ட சபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சட்டவிரோதமாக குடியேறியவர்களை கண்டறியும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.