உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மோடியின் குவைத் பயணம் சக்சஸ்; முழுவிவரம் Modi at Kuwait| Modi Tours on Kuwait

மோடியின் குவைத் பயணம் சக்சஸ்; முழுவிவரம் Modi at Kuwait| Modi Tours on Kuwait

மோடியின் குவைத் பயணம் சக்சஸ்; முழுவிவரம் Modi at Kuwait| Modi Tours on Kuwait | Kuwait Honour for Modi அரசு முறை பயணமாக நேற்று குவைத் நாட்டிற்கு சென்ற பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் அந்நாட்டு அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். குவைத் நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் இந்திய பாரம்பரிய, கலாசார கலை நிகழ்ச்சிகளுடன் மோடியை வரவேற்றனர். கலைநிகழ்ச்சிகளை மோடி பார்த்து ரசித்தார். அரபு மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட ராமாயணம், மகாபாரதத்தை பார்த்து வியந்த மோடி, அந்த புத்தகங்களில் கையெழுத்திட்டு தந்தார். பிறகு குவைத்தில் வசிக்கும் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். குவைத்தில் வசிக்கும் இந்திய தொழிலாளர்களையும் மோடி சந்தித்து பேசினார். தொழிலாளர்கள் தங்கள் அனுபவங்களை பிரதமருடன் பகிர்ந்து கொண்டனர். குவைத்தில் நடந்த கல்ப் கப் விளையாட்டு போட்டிகள் துவக்க விழாவிலும் பிரதமர் மோடி பங்கேற்றார். குவைத் அரண்மனையில் பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பேண்டு வாத்தியங்கள் முழங்க மோடியை வீரர்கள் வரவேற்று, அரசு மரியாதை அளித்தனர். அதன் பிறகு குவைத் அமீர் ஷேக் மெஷல் அல் அகமதுவுடன் பிரதமர் மோடி இரு நாட்டு உறவு மற்றும் தாெழில், வர்த்தகம் குறித்து ஆலோசித்தார். இதையடுத்து, பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் மிக உயரிய விருதான தி ஆர்டர் ஆப் முபாரக் தி கிரேட் விருதை அந்நாட்டு அரசு வழங்கியது. இதை, அமீர் ஷேக் மெஷல் வழங்க பிரதமர் மோடி பெற்றுக்கொண்டார். இது இந்தியாவுக்கு கிடைத்த மிகப் பெரிய கவுரவம் என மோடி கூறினார். பல்வேறு நாடுகளின் சார்பில் மோடிக்கு வழங்கப்பட்ட 20வது மிக உயரிய விருது இதுவாகும்,. அதைத்தொடர்ந்து, மோடி, ஷேக் மெஷல் மற்றும் இருநாட்டு அமைச்சர்கள் தொழில், வர்த்தகம் குறித்து பேச்சு நடத்தினர். இரு நாடுகளுக்கிடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மருந்துப் பொருள் தயாரிப்பு, நிதிசார் தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு, பாதுகாப்பு, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளிடையே பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இருவரும் பேச்சு நடத்தியதாக மோடி கூறினார் இதைத் தொடர்ந்து, குவைத் பட்டத்து இளவரசர் ஷேக் ஷாபா அல் காலித்தையும் பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அவரை சந்தித்தில் மிகுந்து மகிழ்ச்சி எனக் கூறிய மோடி, இரு நாட்டு பொருளாதார, கலாசார உறவுகள் குறித்து ஆலோசித்ததாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். குவைத் நாட்டில் 2 நாள் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு பிரதமர் மோடி டில்லி புறப்பட்டார். விமான நிலையத்தில் அந்நாட்டு அதிகாரிகள் மோடியை வழி அனுப்பி வைத்தனர்.

டிச 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை