பெயில் ஆனா இனி அதே வகுப்பு தான்: மத்திய அரசு அதிரடி | No more all pass
பெயில் ஆனா இனி அதே வகுப்பு தான்: மத்திய அரசு அதிரடி | No more all pass | 5th and 8th grade | Union govt announces | பள்ளிகளில் 5 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களை பெயில் ஆக்கக்கூடாது என்ற கொள்கையை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய பள்ளிக்கல்விதுறை செயலாளர் சஞ்சய் குமார் வெளியிட்டு உள்ளார். 5 மற்றும் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏற்கனவே இருந்த கட்டாய தேர்ச்சி முறையால், கல்வித்தரம் குறைந்து வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இதன் காரணமாக ஆர்டிஇ எனும் கல்வி உரிமை சட்டத்தின் விதிகள் திருத்தப்பட்டுள்ளன. அந்த விதிகளின்படி, இனிமேல் 5 மற்றும் 8ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி கிடையாது. தோல்வி அடைந்த மாணவர்களுக்கு 2 மாதங்களுக்குள் மறு தேர்வு எழுதுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும். மறுதேர்வில் தோல்வி அடைந்தால், அடுத்த வகுப்புக்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. தேர்வு முறையிலும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. துவக்கக்கல்வி முடியும் வரை எந்த பள்ளியில் இருந்தும் மாணவர்களை வெளியேற்றக்கூடாது என்றும அந்த அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது. கேந்திரிய வித்யாலயா, நவோதயா, வித்யாலயா மற்றும் சைனிக் பள்ளிகள் உட்பட மத்திய அரசால் நடத்தப்படும் 3,000 பள்ளிகளுக்கு இந்த அறிவிப்பு பொருந்தும். ஏற்கனவே 16 மாநில அரசுகள், டில்லி உள்ளிட்ட 2 யூனியன் பிரதேசங்கள் கட்டாய தேர்ச்சி முறையை கைவிட்டு விட்டன. மற்ற மாநில அரசுகள், இதுபற்றி தாங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.