உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மும்மதத்தினரை திருப்திபடுத்த யோசனை செய்யும் அரசு! Pongal Gift | Rs 1000 | TN Government

மும்மதத்தினரை திருப்திபடுத்த யோசனை செய்யும் அரசு! Pongal Gift | Rs 1000 | TN Government

தமிழக அரசு வாயிலாக, ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 1,000 ரூபாயுடன் பச்சரிசி, வெல்லம், கரும்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. இதன் வாயிலாக 2.20 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் பயன் பெறுகின்றனர். இதற்காக 2,500 கோடி ரூபாய் வரை அரசு செலவிடுகிறது. அனைத்து மத மக்களும் தமிழர் பண்டிகையான பொங்கலை கொண்டாடும் வகையில், பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் கிறிஸ்துமஸ், ரம்ஜான் பண்டிகை காலங்களில் 1,000 ரூபாய் பரிசு வழங்கினால், அவர்களுக்கு உதவியாக இருக்கும் என்ற கருத்தும் எழுந்துள்ளது. எனவே பொங்கல் பரிசு தொகுப்பை, மூன்றாக பிரித்து கிறிஸ்துமஸ், ரம்ஜான் பண்டிகை காலங்களில் வழங்கலாம் என்ற யோசனை அரசுக்கு எழுந்துள்ளது. இது தொடர்பாக, முதற்கட்ட ஆலோசனை நிதித்துறையில் நடந்து வருகிறது. பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கு, ஒரே நேரத்தில் நிதி ஒதுக்குவதால், அரசுக்கும் நெருக்கடி ஏற்படுகிறது. எனவே மூன்றாக பிரித்து நிதி ஒதுக்கீடு செய்தால், நெருக்கடியை அரசால் ஓரளவுக்கு சமாளிக்க முடியும்; மூன்று மதத்தினரையும் திருப்திப்படுத்த முடியும்.

டிச 24, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி