உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தூக்கம் தொலைத்த நத்தம் மக்கள்! பின்னணி என்ன? | Dindigul Car Chasing | Natham Police | Car Chasing CC

தூக்கம் தொலைத்த நத்தம் மக்கள்! பின்னணி என்ன? | Dindigul Car Chasing | Natham Police | Car Chasing CC

தூக்கம் தொலைத்த நத்தம் மக்கள்! பின்னணி என்ன? | Dindigul Car Chasing | Natham Police | Car Chasing CCTV நேற்று இரவு 10 மணி அளவில் திண்டுக்கல் போலீஸ் கன்ட்ரோல் ரூமுக்கு ஒரு போன் வந்தது. கார்த்திகேயன் என்பவர் தன்னை ஒரு கும்பல் காரில் கடத்தியதாகவும் நத்தம் அருகே இறக்கி விட்டு சென்றதாகவும் கூறினார். காரின் அடையாளங்களையும் சொன்னார். நத்தம் சாலையில் சென்று கொண்டு இருந்த அந்த பச்சை நிற குவாலீஸ் காரை பிடிக்க சாணார்பட்டி போலீசார் அலர்ட் செய்யப்பட்டனர். சாணார்பட்டி ஸ்டேஷன் முன் பேரிகார்டுகள் வைத்து தடுக்க முயன்ற போது எஸ்ஐ சசி மீது அந்த கார் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. லேசான காயங்களுடன் சசி தப்பினார். இரவு பணியில் இருந்த போலீசாருக்கு தகவல் கொடுத்து காரை சேஸ் செய்தனர். கோபால்பட்டி பஸ் ஸ்டாப்பில் போலீசார் ஆட்டோக்களை சாலையின் குறுக்கே நிறுத்தினர். அங்கேயும் அந்த கார் குறுக்கே புகுந்து சாலையை கடக்க முயன்ற தொழிலாளி ஒருவர் மீது மோதி சென்றது. சம்பவத்தை நேரில் பார்த்த மக்களும் காரை விரட்ட ஆரம்பித்தனர். கோபால்பட்டியை அடுத்த வடுகபட்டி பிரிவிலும் பேரிக்கார்டுகள் மீது மோதி கார் தப்பியது. இந்த காட்சிகள் அங்குள்ள சிசிடிவியில் பதிவாகின. நத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதி போலீசார் உஷார் படுத்தப்பட்டு வாகன சோதனையை தீவிரப்படுத்தினர். எரமநாயக்கன்பட்டி பிரிவில் மூன்று லாரிகளை குறுக்கே நிறுத்தி போலீசார் என்டு கார்டு வைத்தனர். காரை யூடர்ன் எடுத்த அந்த நபர்கள் சக்கிலியன் கொடை ஊர்வழியாக தப்பிச் செல்ல முயன்றனர். அப்போது காரில் இருந்த ஒருவன் இறங்கி ஊருக்குள் தப்ப முயன்றான். அந்த வாலிபரை மடக்கி பிடித்து ஊர் மக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். காரில் இருந்த மற்ற 4 பேரும் கரந்தமலை வனப்பகுதிக்குள் சென்று ஒத்தையடி பாதையில் காரை விட்டு அங்கிருந்து தப்பினர். காரை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்ததில் பட்டா கத்தி மற்றும் சில ஆவணங்கள் சிக்கியது. காட்டுக்குள் தப்பி சென்ற கும்பலை போலீசார் மற்றும் மக்கள் இரவு முழுதும் சல்லடை போட்டனர். அதே நேரம் முதலில் போலீஸ் வசம் சிக்கிய திருச்சி கருமண்டபத்தை சேர்ந்த பசுபதியை விசாரித்தனர். காரில் வந்த அனைவரும் மதுரை வாடிப்பட்டியை சேர்ந்த நபரை கொடுக்கல் வாங்கல் தகராறில் கடத்தியது தெரிய வந்தது. காலை மலையில் இருந்து இறங்கி வந்த திருச்சி கருமண்டபத்தை சேர்ந்த கார்த்திக், முத்துக்குமார், ஆனந்தகுமார், வீரகணேசன் போலீசிடம் சரண் அடைந்தனர். ஐந்து நபர்களும், கடத்தலுக்கு பயன்படுத்திய கார், பணம் மற்றும் ஆவணங்களுடன் வாடிப்பட்டி போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். நள்ளிரவு 1 மணி வரை சினிமா பாணியில் நடந்த சேசிங் சம்பவம் நத்தம் பகுதி மக்களை தூக்கம் தொலைக்க வைத்தது. ஆள் கடத்தல் சம்பவத்தின் பின்னணி குறித்து விசாரணை நடக்கிறது. இரவு முழுதும் தேடுதல் வேட்டை நடத்தி குற்றவாளிகளை பிடித்த போலீசாரை திண்டுக்கல் எஸ்பி பாராட்டினார்.

டிச 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை