உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 37 வீடுகளை இடித்து தள்ளிய யானை: பகீர் சம்பவம் | Elephant | Ooty

37 வீடுகளை இடித்து தள்ளிய யானை: பகீர் சம்பவம் | Elephant | Ooty

37 வீடுகளை இடித்து தள்ளிய யானை: பகீர் சம்பவம் | Elephant | Ooty நீலகிரி மாவட்டம் பந்தலூர் சுற்றுவட்டார பகுதியில் 35க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளது. இதில் புல்லட் என்று அழைக்கப்படும் யானை தொடர்ந்து வீடுகளை இடித்து உணவுகளை சாப்பிட்டு செல்கிறது. கடந்த இரண்டு மாதங்களுக்குள் 35க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்து மனிதர்களையும் தாக்கியுள்ளது. வனத்துறையினர் கும்கி யானைகள் உதவியுடன் புல்லட் யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இந்த யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்துச் செல்ல வேண்டும் என பந்தலூர் மக்கள் வலியுறுத்தினர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய கூடுதல் தலைமை வன பாதுகாவலர் நாகநாதன் மக்கள் வன விலங்குகளுடன் ஒன்றிணைந்து வாழ பழகிக்கொள்ள வேண்டும் என்றார். குடியிருப்புகளை இடித்து வரும் புல்லட் யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இனி இந்த யானை குடியிருப்பு பகுதிக்குள் வராது. அதற்கு நான் உத்தரவாதம் தருகிறேன் என தெரிவித்தார். புல்லட் யானையை விரட்ட ஒரு வாரம் கால அவகாசம் கேட்டிருந்தார். ஆனால் மீண்டும் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த புல்லட் யானை தவமணி, ஞானசேகர் ஆகிய இருவரது வீடுகளையும் இடித்தது. வீட்டில் இருந்தவர்கள் பின்பக்க கதவு வழியாக ஓடி உயிர் தப்பினார்கள். வனத்துறையினர் பட்டாசு வெடித்து யானையை அங்கிருந்து துரத்தினார். யானை குடியிருப்புகளை ஒட்டிய தேயிலை தோட்டத்தில் முகாமிட்டு இருப்பதால் தோட்ட தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல மறுத்துவிட்டனர். தொடர்ச்சியாக குடியிருப்புகளை இடித்து வரும் புல்லட் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்து செல்ல வலியுறுத்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

டிச 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை