சீனாவை பார்த்து சுதாரித்த அதிகாரிகள்! | Glass bridge in Kanyakumari | Thiruvalluvar Statue
சீனாவை பார்த்து சுதாரித்த அதிகாரிகள்! | Glass bridge in Kanyakumari | Thiruvalluvar Statue | Vivekananda Rock கன்னியாகுமரி கடற்கரையில் இருந்து 950 மீட்டர் தொலைவில், விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலை உள்ளது. இரண்டு இடங்களுக்கும் செல்ல பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் வாயிலாக சிறிய சுற்றுலா கப்பல்கள் மற்றும் படகுகள் இயக்கப்படுகின்றன. கடல் சீற்றம் , கடல்நீர் மட்டம் குறையும் நேரங்களில் போக்குவரத்து நிறுத்தப்படும். இந்த நேரங்களில் திருவள்ளுவர் சிலைக்கு செல்ல முடியாமல், டூரிஸ்ட்கள் விரக்தி அடைகின்றனர். இதனால் விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலையை இணைக்கும் வகையில் கண்ணாடி இழை பாலம் கட்டப்படும் என சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. 37 கோடி ரூபாய் ஒதுக்கி கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. பாலம் கட்டும் பணிகள் முடிந்து, ஓரிரு நாட்களில் கண்ணாடி இழை பொருத்தப்பட உள்ளது. இதற்கான பணிகள் இரவு, பகலாக நடந்து வரும் சூழலில் டைல்ஸ் கற்களை பயன்படுத்தி தரையும் அமைக்கப்பட்டு வருவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக பொதுப்பணி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: சீனாவில் உள்ள ஆற்றின் குறுக்கே, ஒரு பிரபல நிறுவனம் கண்ணாடி இழை பாலத்தை கட்டியுள்ளது. முழுதும் கண்ணாடி பயன்படுத்தி கட்டப்பட்ட அந்த பாலத்தில் நடப்பதற்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அச்சப்படுகின்றனர். அதே நிறுவனத்தின் தொழிற்சாலை காஞ்சிபுரத்தில் உள்ளது. அந்நிறுவனம் வாயிலாகவே கண்ணாடி இழை பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. சீனாவின் அனுபவத்தை அந்நிறுவன அதிகாரிகள், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, செயலர் மங்கத்ராம் சர்மாவிடம் எடுத்து கூறியுள்ளனர். கடலில் கண்ணாடி பாலம் என்பதால் மக்களுக்கு அச்ச உணர்வு அதிகரிக்கும் என்றும் விளக்கப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து பாலத்தின் 2 பகுதிகளில், டைல்ஸ் கற்களை பொறுத்தி, நடுவில் கண்ணாடி இழையை பயன்படுத்தி பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதில் மக்கள் எந்த அச்சமும் இன்றி நடந்து செல்லலாம் என்றார்.