உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / விஜய் எழுதிய லெட்டருடன் களத்தில் தவெக! | TVK | Vijai | Vijai Letter | Anna university

விஜய் எழுதிய லெட்டருடன் களத்தில் தவெக! | TVK | Vijai | Vijai Letter | Anna university

விஜய் எழுதிய லெட்டருடன் களத்தில் தவெக! | TVK | Vijay | Vijay Letter | Anna university தவெக தலைவர் விஜய் அன்புத் தங்கைகள் என குறிப்பிட்டு கடிதம் ஒன்றை எழுதி இருந்தார். கல்வி வளாகம் முதல் ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் தாய்மார்கள், என் அருமை தங்கைகள், பெண் குழந்தைகள் என அனைத்து தரப்பு பெண்களுக்கும் எதிராக நடக்கும் சமூக அவலங்கள், சட்ட ஒழுங்கு சீர்கேடு அவலங்கள், பாலியல் குற்றங்கள் என பல வன்கொடுமைகளை கண்டு, உங்கள் அண்ணனாக மன அழுத்தத்திற்கும், வேதனைக்கும் ஆளாகிறேன். யாரிடம் உங்கள் பாதுகாப்பை கேட்பது? நம்மை ஆளும் ஆட்சியாளர்களை எத்தனை முறை கேட்டாலும், எந்த பயனும் இல்லை என்பது தெரிந்ததே. எல்லா சூழல்களிலும், நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக நிற்பேன். அண்ணனாகவும், அரணாகவும். எனவே எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் கல்வியில் கவனம் செலுத்துங்கள். பாதுகாப்பான தமிழகத்தை படைத்தே தீருவோம். அதற்கான உத்தரவாதத்தை நாம் அனைவரும் இணைந்தே விரைவில் சாத்தியப்படுத்துவோம் என கடிதத்தில் கூறி இருந்தார். அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து கவர்னர் ரவியையும் சந்தித்து மனு கொடுத்தார். இதை தொடர்ந்து சேலத்தில் தவெக மகளிர் அணியினர் விஜய் எழுதிய கடிதத்தை துண்டு பிரசுரமாக வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

டிச 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை