உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டிடிஎப் வாசன் சேட்டை; அரியவகை கிளி ஆமை பறிமுதல் | TTF Vasan | YouTuber Vasan Snake | Forest Departme

டிடிஎப் வாசன் சேட்டை; அரியவகை கிளி ஆமை பறிமுதல் | TTF Vasan | YouTuber Vasan Snake | Forest Departme

டிடிஎப் வாசன் சேட்டை; அரியவகை கிளி ஆமை பறிமுதல் | TTF Vasan | YouTuber Vasan Snake | Forest Department பைக் சாகசம், லைசன்ஸ் ரத்து என பல சர்ச்சைகளில் சிக்கியவர் யூடியூபர் டிடிஎப் வாசன். அதில் இருந்து வெளிவந்து பைக் உதிரிபாகங்களை விற்பனை செய்யும் கடை ஒன்றை திறந்தார். அப்போதும் அதிக ஒலி எழுப்பும் சைலன்சர்கள் விற்றது, போன் பேசி கொண்டே கார் ஓட்டியது, திருப்பதியில் பக்தர்களுக்கு இடையூறு செய்தது என அடுத்தடுத்து வாசன் மீது வழக்கு பாய்ந்தது. இப்படி புது புது சர்ச்சைக்கு பெயர் போன டிடிஎப் வாசன் இப்போது மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளார். சமீபத்தில் கையில் மலைப்பாம்பை சுற்றி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். பாம்புடன் அவர் செய்த அட்ராசிட்டிகள் வைரலாகி வனத்துறை கவனத்துக்கும் சென்றது. வனத்துறை அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணையை துவக்கினர். அவரிடம் லைசென்ஸ் உள்ளதா என்பது உறுதி செய்யப்படும், பாம்பை சித்ரவதை செய்தல் தொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. முதல் கட்டமாக சென்னை திருவொற்றியூரில் உள்ள செல்ல பிராணிகள் விற்பனை கடையில் வன அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஒரு மணி நேர சோதனை முடிவில் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த கிளி மற்றும் அரியவகை ஆமை ஒன்றை கைப்பற்றி சென்றனர். முன்னதாக சில தினங்களுக்கு முன் இந்த கடைக்கு வந்த வாசன் கையோடு கொண்டு வந்த பாம்புக்கு கூண்டு வாங்கி சென்றார். இங்கு பாம்புகளும் விற்கப்படுவதாக வீடியோ வெளியிட்டிருந்தார். அதனடிப்படையில் தான் சோதனை நடந்துள்ளது. உரிய ஆவணங்கள் வழங்கினால் ஆமை, கிளி மீண்டும் வழங்கப்படும் என வன அதிகாரிகள் தரப்பில் கூறி சென்றனர்.

டிச 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி