/ தினமலர் டிவி
/ பொது
/ கட்சியில் உறுப்பினராக இல்லாதவர் தொடர்ந்த வழக்கை நிராகரிக்க கோரிக்கை! Edappadi Palanisamy | ADMK
கட்சியில் உறுப்பினராக இல்லாதவர் தொடர்ந்த வழக்கை நிராகரிக்க கோரிக்கை! Edappadi Palanisamy | ADMK
உட்கட்சி விவகாரங்களில், தேர்தல் கமிஷன் தலையிட முடியாது என, அ.தி.மு.க. பொதுச்செயலர் பழனிசாமி கடிதம் எழுதியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இரட்டை இலை சின்னம் தொடர்பாக, புகார் கொடுத்தவர்கள் அனைவரிடமும் விசாரித்து முடிவெடுக்கும்படி தேர்தல் கமிஷனுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், அ.தி.மு.க. பொதுச்செயலர் பழனிசாமி, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், சூர்யகுமார், வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்யன், முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி, புகழேந்தி உள்ளிட்டோர் விளக்கம் அளிக்கும்படி, தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியது.
ஜன 01, 2025