உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சைபர் மோசடி கும்பலின் புதிய ரூட்: எச்சரிக்கும் போலீஸ் | Cyber fraud | New link | PM Modi picture

சைபர் மோசடி கும்பலின் புதிய ரூட்: எச்சரிக்கும் போலீஸ் | Cyber fraud | New link | PM Modi picture

சைபர் மோசடி கும்பலின் புதிய ரூட்: எச்சரிக்கும் போலீஸ் | Cyber fraud | New link | PM Modi picture | Cyber crime police warns | இன்றைய நவீன உலகில் ஆன்லைன் வழியில் நடக்கும் மோசடிகள் நாளுக்குள் நாள் அதிகரித்து வருகிறது. போனில் பேசி வங்கி கணக்கு விபரங்களை பெற்று பணம் திருடிய கும்பல், இப்போது தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விதவிதமாக மோசடி செய்கிறது. குறிப்பாக வாழ்த்து கடிதம் போல் நம், வாட்ஸாப் எண்ணிற்கு பி.டி.எப்.பைல் அனுப்பி அதன்மூலம் வங்கி கணக்கில் நுழைந்து பணத்தை திருடுகின்றனர். வங்கியில் இருந்து, நோ யுவர் கஸ்டமர் தகவல் அப்டேட் செய்ய வேண்டும் எனக் கூறி பைல் அனுப்பி மோசடி செய்கின்றனர். அமேசான், பிளிப்கார்டில் குறைந்த விலையில் பொருட்கள் கிடைப்பதாக கூறி, லிங்க் அனுப்பி பணத்தை சுருட்டுகின்றனர். போலீசாரின் தொடர் எச்சரிக்கையால் இதை பற்றியெல்லாம் மக்களுக்கு ஓரளவு விழிப்புணர்வு இருப்பதால், இப்போது சைபர் கிரைம் குற்றவாளிகள் புதிதாக ஒரு மோசடியில் ஈடுபட தொடங்கி உள்ளனர். பேஸ்புக், இன்ஸ்டாகிராம், திரெட் போன்ற சோசியல் மீடியா தளத்தில், பிரதமர் மோடி படத்துடன், பா.ஜ வெளியிட்டது போல் போலியாக ஒரு விளம்பர ஸ்டில்லை லிங்க் வசதியுடன் அப்டேட் செய்துள்ளனர். அதில், பாரத் ஜன் தன் யோஜனா மூலம் ஒவ்வொரு மக்களுக்கும் 5,000 ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்க ஸ்கிராட்ச் செய்யவும் என குறிப்பிட்டுள்ளனர். அதுபோல் பா.ஜவில் இருந்து 5,000 ரூபாய் கிடைக்க இங்கே கிளிக் செய்யவும் என லிங்க் கொடுத்துள்ளனர். விழிப்புணர்வு இல்லாதவர்கள் அதை கிளிக் செய்யும்போது, வங்கி விபரங்களை பெற்று, பணத்தை மொத்தமாக சுருட்டி விடுகின்றனர். இப்படி தமிழகம் முழுதும் பல லட்சம் ரூபாய் மோசடி செய்து வருவதாக போலீசார் எச்சரித்துள்ளனர். மோசடி கும்பல் அனுப்பும், லிங்க்கை தெரிந்தோ தெரியாமலோ தொட்டுவிட்டால், நம் வங்கி கணக்கு மற்றும் செல்போனில் உள்ள விபரங்கள் அனைத்தும், அவர்களிடம் சென்று விடும். அதுபோல் முன்பின் தெரியாத வெளிநாட்டு அழைப்பை ஏற்கக்கூடாது. அதில் உங்களது செல்போன் எண், வெரிபிகேஷன் என தகவல் தெரிவிப்பர். ஓகே செய்ய ஒரு எண்ணை அழுத்தச் சொல்வர். அழுத்தினால் நம் விபரங்கள் அவர்களிடம் சென்றுவிடும். சைபர் குற்றங்கள் குறித்து 1930 என்ற இலவச எண்ணுக்கு உடனே தகவல் தெரிவிக்கவும் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

ஜன 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி