அமெரிக்க தாக்குதல் மூளை சம்சுதீன் யார்? | new orleans attack | US attack | ISIS | Shamsud Din Jabbar
அமெரிக்க தாக்குதல் மூளை சம்சுதீன் யார்? | new orleans attack | US attack | ISIS | Shamsud Din Jabbar ஜெர்மனியில் நடந்த கிறிஸ்மஸ் மார்க்கெட் கார் அட்டாக் மாடலில், அமெரிக்காவின் லூசியானா மாகாணம் நியூ ஆர்லியன்ஸ் நகரில் நடந்த நியூ இயர் டிரக் அட்டாக் உலகை அதிர வைத்துள்ளது. நியூ ஆர்லியன்சில் உள்ள பிரஞ்ச் குவாட்ரஸ் பகுதியில் புத்தாண்டை கொண்டாட திரளான மக்கள் கூடி இருந்தனர். ஆட்டம் பாட்டத்துடன் மகிழ்ச்சியில் திளைத்திருந்த மக்கள் கூட்டத்தில் மின்னல் வேகத்தில் வந்த ஒரு டிரக் புகுந்தது. இதில் கொத்து கொத்தாக மக்கள் தூக்கி வீசப்பட்டனர். 15 பேர் உடல் சிதைந்து பலியாகினர். 30 பேர் வரை காயம் அடைந்தனர். இந்த கொடூர தாக்குதலை நடத்திய சம்சுதீன் ஜாபர் என்பவனை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் சுட்டுக்கொன்றனர். தாக்குதலுக்கு அவன் பயன்படுத்திய டிரக்கில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் கொடியை சொருகி இருந்தான். டிரக்கில் நடத்திய சோதனையில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு மீட்கப்பட்டது. இது வெடித்திருந்தால் இழப்பு இன்னும் பல மடங்கு உயர்ந்திருக்க கூடும். கொடூர சம்பவம் பற்றி அமெரிக்காவின் எப்பிஐ விசாரித்து வருகிறது. தாக்குதல் பின்னணியில் ஐஎஸ் பயங்கரவாதிகள் இருக்கலாம் என்று முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது. இப்படி மிருகத்தனமான காரியத்தை செய்த சம்சுதீன் ஜாபர் யார்? அவனுக்கும் ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கும் என்ன தொடர்பு? அமெரிக்காவில் அவன் என்ன செய்தான்? என்பதை பார்க்கலாம். சம்சுதீன் ஜாபர் அமெரிக்காவில் பிறந்தவன் தான். அவனுக்கு வயது 42. இவனது பின்னணி மர்மங்கள் நிறைந்தது. 13 ஆண்டுகள் அமெரிக்க ராணுவத்துக்காக வேலை பார்த்தவன். ராணுவத்தில் இருக்கும் போது சிறப்பாக பணியாற்றியதற்கும் நேர்மையாக நடந்து கொண்டதற்கும் விருதுகளை பெற்றான்.