பழனியில் நடந்த அட்டூழியம்: அம்பலப்படுத்திய பாஜ நிர்வாகி | Annamalai | TNbjp | Dindigul
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து மதுரையில் இருந்து சென்னை வரை பாஜ சார்பில் இன்று நீதி பேரணி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. பேரணியில் பங்கேற்க தமிழகம் முழுதும் இருந்து ஏராளமான பெண்கள் மதுரைக்கு செல்ல திட்டமிட்டிருந்தனர். போலீசார் பேரணிக்கு அனுமதி வழங்கவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கை என கூறி புறப்படும் இடத்திலேயே பலர் தடுத்து நிறுத்தப்பட்டனர். பழனியிலும் மதுரைக்கு வேனில் கிளம்பிய பாஜ மகளிரணியினரை கைது செய்து போலீசார் தனியார் மண்டபத்தில் அடைத்தனர். இது குறித்து திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜ தலைவர் கனகராஜ் செய்தியாளரை சந்தித்தார். அப்போது பாஜ பெண் நிர்வாகிகளை அடைத்து வைத்து இருந்த மண்டபத்திற்கு 50க்கும் மேலான போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தும் அதன் அருகிலேயே தனியார் மதுபான பார் காலை 8 மணிக்கே செயல்பட்டதை காண்பித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.