காங்கிரஸ் போட்ட தீர்மானம்: திமுக முடிவு என்ன? | Erode East | EVKS Elangovan | Sanjay Sampath
காங்கிரஸ் போட்ட தீர்மானம்: திமுக முடிவு என்ன? | Erode East | EVKS Elangovan | Sanjay Sampath 2021 சட்டசபை தேர்தலில் ஈரோடு கிழக்கில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் போட்டியிட்டது. காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மூத்த மகன் திருமகன் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார். 2023 ஜனவரியில் அவர் உடல் நலக்குறைவால் இறந்தார். தொடர்ந்து பிப்ரவரியில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த டிசம்பர் மாதம் அவரும் உடல்நலக்குறைவால் இறந்தார். ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இரண்டாவது முறையாக இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. திமுக கூட்டணியில் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு சீட் ஒதுக்க வேண்டும் என அக்கட்சியினர் கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில் மறைந்த காங்கிரஸ் எம்எல்ஏ திருமகனின் 2ம் ஆண்டு நினைவு நாள் ஈரோடு காங்கிரஸ் அலுவலகத்தில் அனுசரிக்கப்பட்டது. இடைத்தேர்தலில் இளங்கோவனின் இளைய மகன் சஞ்சய் சம்பத்துக்கு போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 44 வயதாகும் சஞ்சய் சம்பத் டெல்லியில் எம்பிஏ படித்துள்ளார். இளைஞர் காங்கிரஸ் கட்சியில் பொறுப்பில் இருந்துள்ளார். இப்போது காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினராக உள்ளார். இதுஒருபுறம் இருக்க ஏற்கனவே இரண்டு முறை ஈரோடு கிழக்கில் காங்கிரஸ் போட்டியிட்ட நிலையில் இந்த முறை திமுக போட்டியிட வேண்டும் என அக்கட்சி நிர்வாகிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் ஈரோடு கிழக்கு தொகுதியை காங்கிரசிடம் இருந்து திமுக பறிக்காது என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். ஈரோடு கிழக்கில் காங்கிரஸ் போட்டியிட்டு வெற்றி பெறும் என அவர் தெரிவித்தார்.