உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஞானசேகரன் வீட்டில் அள்ள அள்ள ஆதாரம்-அதிர்ச்சி தகவல் Anna university case | SIT raid | Gnana sekaran

ஞானசேகரன் வீட்டில் அள்ள அள்ள ஆதாரம்-அதிர்ச்சி தகவல் Anna university case | SIT raid | Gnana sekaran

ஞானசேகரன் வீட்டில் அள்ள அள்ள ஆதாரம்-அதிர்ச்சி தகவல் Anna university case | SIT raid | Gnana sekaran சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில் 19 வயதான இன்ஜினீயரிங் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. பல்கலை பக்கத்தில் பிரியாணி கடை வைத்திருந்த ஞானசேகரன் என்ற கொடூரன் கைது செய்யப்பட்டான். போலீஸ் விசாரணை குறித்து தொடர்ந்து பல்வேறு சந்தேகங்களை எதிர்கட்சிகள் கிளப்பி வருகின்றன. இதற்கிடையே சம்பவம் குறித்து தாமாக முன் வந்து விசாரித்த சென்னை ஐகோர்ட், பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் புக்யா சினேக பிரியா, அய்மன் ஜமால், பிருந்தா ஆகிய மூவர் தலைமையில் எஸ்ஐடி எனப்படும் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது. எஸ்ஐடி தீவிர விசாரணையில் களம் இறங்கிய பிறகு அடுத்தடுத்து எதிர்பாராத பல திருப்பங்கள் ஏற்பட்ட வண்ணம் இருக்கின்றன. விசாரணையின் ஒரு பகுதியாக ஞானசேகரன் வீட்டில் இன்று சிறப்பு புலனாய்வு குழுவினர் அதிரடி சோதனை நடத்தினர். கோட்டூர்புரத்தில் உள்ள அவனது வீட்டுக்கு சரியாக காலை 11 மணி அளவில் வந்தனர். தொடர்ந்து 3 மணி நேரம் வீட்டில் சல்லடை போட்டனர். பின்னர் மதிய உணவு முடித்து வீட்டு, மீண்டும் சோதனை நடத்தினர். மொத்தம் 6 மணி நேரம் இந்த சோதனை நீடித்தது. 3 பெண் ஐபிஎஸ்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இதில் பல ஆதாரங்களை அதிகாரிகள் கைப்பற்றியதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜன 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ