ஜம்மு - காஷ்மீரில் ராணுவ வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்ததில் விபரீதம் Jammu Kashmir Accident
ஜம்மு - காஷ்மீரில் ராணுவ வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்ததில் விபரீதம் Jammu Kashmir Accident | Army Van fell in to the Gorge டில்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடும் பனி மூட்டம் நிலவும் நிலையில், காஷ்மீரில் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. ஜம்மு - காஷ்மீர் முழுதும் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. சாலைகள் பனிப்போர்வையால் போர்த்தப்பட்டுள்ளன. எல்லையோரம் மலைப்பாங்கான இடங்களில், கடும் பனிப்பொழிவுக்கிடையே ராணுவ வீரர்கள் பாதுகாப்பு, ரோந்து பணியில் ஈடுபட்டுள்னளர். அதிகாலை, இரவு நேரங்களில் பனியின் தாக்கம் அதிகம் உள்ளது. காலை நேரத்தில் புகை மண்டலம் போல் பனி சூழ்வதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். பந்திபோரா பகுதியில் சென்ற ராணுவ வாகனம், மலைப்பாங்கான பகுதியை கடந்தபோது, புகைப்படலம் போன்ற பனிமூட்டத்தால் திடீரென பள்ளத்தில் சரிந்தது. பலத்த சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்தோர் ஓடி வந்தனர். பள்ளத்தில் கவிழ்ந்த வாகனத்தில் இருந்து வீரர்களின் முனகல் சத்தம் கேட்டது. காயமடைந்த 2 வீரர்கள் பிற வீரர்களை மீட்க முயன்றனர். அவர்களுக்கு அப்பகுதி மக்களும் உதவினர். மீட்கப்பட்ட 5 பேர் ஸ்ரீநகர் ஆஸ்பிடலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், 2 வீரர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். படுகாயமடைந்த 3 பேரில் மேலும் ஒருவர் இறந்த நிலையில், மற்ற இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதிலும் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.