உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மணமான சில நாட்களில் எஸ்ஐ உயிரிழந்த சோகம் Road accident government bus

மணமான சில நாட்களில் எஸ்ஐ உயிரிழந்த சோகம் Road accident government bus

மணமான சில நாட்களில் எஸ்ஐ உயிரிழந்த சோகம் Road accident government bus SI kalaiyarasi husband dies driver arrested Using cellphone while driving cuddalore district police crime சிதம்பரம் அருகே உள்ள ஜெயங்கொண்ட பட்டினத்தைச் சேர்ந்தவர் கலையரசி வயது 28. சிதம்பரம் அருகில் உள்ள குமராட்சி போலீஸ் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். இவருக்கும் கலைவேந்தன் என்பவருக்கும் ஒன்றரை மாதங்களுக்குமுன் திருமணம் நடந்தது. கலைவேந்தன் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். பிச்சாவரம் அருகே உள்ள கிராமத்தில் உறவினரின் வளைகாப்பு விழாவில் கலந்து கொள்ள இன்று பகல் 12 மணியளவில் கணவன் மனைவி இருவரும் பைக்கில் புறப்பட்டனர். சிதம்பரம் அருகே உள்ள சித்தரப்பாடி என்ற இடத்தில் சென்றபோது எதிரே வந்த அரசு பஸ் பைக் மீது நேருக்கு நேர் மோதியது. 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாயினர். போலீசார் விரைந்து சென்று உடல்களை பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் இருவரது உடல்களை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர். பஸ் டிரைவர் சபரிராஜன் கைது செய்யப்பட்டார். இவர் தற்காலிக டிரைவராக அரசு போக்குவரத்துக்கழகத்தில் வேலைக்கு சேர்ந்தார். இதற்கு முன் ஆட்டோ ஓட்டிக் கொண்டு இருந்தார். சிதம்பரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஓடும் அரசு பஸ்களை இயக்க போதுமான டிரைவர்கள் இல்லாததால் தற்காலிக டிரைவர்களை போக்குவரத்துக்கழக நிர்வாகம் பணியமர்த்தி உள்ளது. விபத்து நடந்தபோது டிரைவர் செல்போனில் பேசிக்கொண்டே வந்ததாக பயணிகள் கூறினர். கடைசி தருணத்தில் டூ வீலரை பார்த்ததும் சடன் பிரேக் போட்டுள்ளார். ஆனால் பலன் இல்லை. பைக் மீது பஸ் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் 30 மீட்டர் தூரத்துக்கு பைக்கை பஸ் இழுத்துச் சென்றுள்ளது இதில் இருவரது கை, கால்களும் துண்டாகியுள்ளன. கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், சிதம்பரம் டிஎஸ்பி லாமேக் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலையரசியின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர் 2016-ம் ஆண்டில் சப் இன்ஸ்பெக்டராக கலையரசி போலீஸ் பணியில் சேர்ந்தார். காட்டுமன்னார்கோவில், நெய்வேலி மந்தாரக்குப்பம் சிதம்பரம், சேத்தியாத்தோப்பு போலீஸ் நிலையங்களில் பணியாற்றினார். குமராட்சி போலீஸ் நிலையத்தில் 4 மாதங்களுக்கு முன்புதான் பணியில் சேர்ந்தார். நேர்மையான போலீஸ் அதிகாரி என பெயரெடுத்தவர் கலையரசி. நேற்று கூட இரவு முழுவதும் பணி புரிந்துவிட்டு காலையில்தான் வீடு திரும்பினார் என சக போலீசார் கண்ணீருடன் கூறினர். திருமணமான ஒன்றரை மாதத்தில் பெண் எஸ்.ஐ விபத்தில் பலியான சம்பவம் கடலூர் போலீஸ் வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.

ஜன 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ