/ தினமலர் டிவி
/ பொது
/ தமிழகத்தில் போஸ்டர் யுத்தம் நடத்தும் கட்சிகள்! ADMK | DMK | Governor Ravi | Poster
தமிழகத்தில் போஸ்டர் யுத்தம் நடத்தும் கட்சிகள்! ADMK | DMK | Governor Ravi | Poster
அண்ணா பல்கலைக்கழகத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள சார் யார் என்பதை கண்டறிய வேண்டும் என, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. அ.தி.மு.க. சார்பில் தமிழகம் முழுதும், யார் அந்த சார்? என்பதை கேட்டு, போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, அ.தி.மு.க. - ஐ.டி. பிரிவு நிர்வாகிகள், சென்னையில் உள்ள மால்களில், யார் அந்த சார்? என்ற பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வகையில், கடந்த இரண்டு நாட்களாக சட்டசபைக்கு வரும் அ.தி.மு.க. - எம்.எல்.ஏ.க்கள், யார் அந்த சார்? என்ற ஸ்டிக்கரை தங்கள் சட்டையில் வைத்திருந்தனர்.
ஜன 08, 2025