ஈவெரா குறித்த சர்ச்சை பேச்சு சீமான் வீடு முன் பரபரப்பு! | Seeman | NTK | Seeman Speech Controversy
ஈவெரா குறித்த சர்ச்சை பேச்சு சீமான் வீடு முன் பரபரப்பு! | Seeman | NTK | Seeman Speech Controversy ஈவெராவை பற்றி நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று அளித்த பேட்டி சர்ச்சையானது. இதை கண்டித்து சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டை ஈவெரா திராவிட கழகம் சார்பில் இன்று முற்றுகையிட்டனர். சீமான் இதற்கான ஆதாரத்தை காட்ட வேண்டும் என கோஷமிட்டனர். சீமான் வீட்டிற்கு நிர்வாகி ஒருவர் வந்த போது அவரது கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. சீமான் வீட்டுக்கு செல்லும் பாதையில் பேரிகார்டுகள் அமைத்து போலீசார் தடுத்தனர். போலீசார் எச்சரித்தும் கலைந்து செல்லாததால் தள்ளுமுள்ளு உருவாகியது. குண்டு கட்டாக கைது செய்த நீலாங்கரை போலீசார் அவர்களை திருமண மண்டபத்தில் அடைத்தனர். சீமான் வீட்டுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.