10 லட்சம் புலம் பெயர் மக்களுக்கு பைடன் அளித்த நிம்மதி |18 more months|temporary protection
10 லட்சம் புலம் பெயர் மக்களுக்கு பைடன் அளித்த நிம்மதி |18 more months|temporary protection|migrants|biden Govt| டொனால்டு டிரம்ப் அமெரிக்காவின் 47வது அதிபராக வரும் 20ல் பதவி ஏற்கிறார். பதவிக்கு வருவதற்கு முன்பே அதிரடி அறிவிப்புகளையும், கருத்துகளையும் கூறி வருகிறார். அமெரிக்க அரசின் குடியேற்ற கொள்கையில் மாற்றங்களைக் கொண்டுவர போவதாகவும் கூறினார். இயற்கை பேரிடர் அல்லது உள்நாட்டு போரால் பாதித்த நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்கா வரும்பட்சத்தில், அவர்களுக்கு அமெரிக்க அரசு தற்காலிக சட்ட பாதுகாப்பு அளிக்கிறது. அவர்கள் ஒரே நேரத்தில் 18 மாதங்கள் அமெரிக்காவில் வேலை செய்து வாழலாம். 1990ல் அமெரிக்க பார்லிமென்ட் இந்த தற்காலிக பாதுகாப்புக்கு அனுமதி வழங்கியது. அதில் மாற்றங்களை செய்து, அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்தவர்களை மீண்டும் அவர்கள் நாட்டுக்கே அனுப்புவதில் டிரம்ப் உறுதி காட்டி வருகிறார். ஆனால் தடாலடியாக அவரின் விருப்பத்துக்கு நேர் எதிரான உத்தரவை தற்போதைய அதிபர் பைடன் அரசு நேற்று வெளியிட்டுள்ளது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவில் வாழும் புலம் பெயர்ந்த மக்கள், மேலும் 18 மாதங்கள் சட்ட பாதுகாப்புடன் தற்காலிகமாக வசிக்கலாம் என்பதே அந்த உத்தரவு. வெனிசுலா, ஹைத்தி, ஹோண்டுராஸ், இ.ஐ.சால்வடார் ஆப்கானிஸ்தான், சூடான், லெபனான் உட்பட 17 நாடுகளில் இருந்து புலம் பெயர்ந்து அமெரிக்காவில் வசிப்பவர்களுக்கு இந்த உத்தரவு நிம்மதியை தந்துள்ளது. இதில், இ.ஐ.சால்வடார் EI Salvador, வெனிசுலாVenezuela, உக்ரைன் Ukraine நாடுகளை சேர்ந்த பத்து லட்சம் பேர் அதிக பயன் அடைவார்கள் என கூறப்படுகிறது. பைடன் அரசுக்கு இன்னும் சில தினங்களே ஆயுட்காலம் இருக்கும் நிலையில், கடைசி நேரத்தில் குடியேற்ற கொள்கையில் டிரம்ப் முயற்சிக்கு எதிரான உத்தரவு பிறப்பித்து இருப்பது பேசு பொருளாகி இருக்கிறது.