உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டெல்லி தேர்தலில் காங்கிரசின் கையை தூக்கிவிடுமா திமுக

டெல்லி தேர்தலில் காங்கிரசின் கையை தூக்கிவிடுமா திமுக

கடந்த லோக்சபா தேர்தலில் பாஜவை எதிர்த்து எதிர்கட்சிகள் ஒன்று சேர்ந்து இண்டி கூட்டணியை உருவாக்கின. தற்போது கட்சிகளுக்குள் ஏற்பட்ட அதிருப்தியால், கூட்டணி காணாமல் போகும் நிலையில் இருக்கிறது. கூட்டணயில் இருக்கும் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் டெல்லி சட்டசபை தேர்தலில் தனித்தனியாக போட்டியிடுகின்றன. மம்தா, லாலு, உத்தவ் உள்ளிட்ட தலைவர்கள் ஆம் ஆத்மிக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு எதிரான இந்த நிலைப்பாடு, ராகுலுக்கு சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. இண்டி கூட்டணியில் தற்போது காங்கிரசுக்கு முழு ஆதரவாக இருப்பது திமுக மட்டும்தான். வடமாநில அரசியல் மாற்றம் திமுகவையும் மடை மாற்றி விடுமோ என காங்கிரசுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இது பற்றி காங்கிரஸ் சீனியர் தலைவர்கள் திமுக எம்பிக்களிடம் பேசி கருத்தை கேட்டு வருகின்றனர். திமுகவை பொறுத்தவரை காங்கிரசை கைவிடாது. காரணம் தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணி இருந்தாதால் தான் வெற்றி பெற முடியும். கெஜ்ரிவால், மம்தா உள்ளிட்டோர் திமுகவுக்கு ஆதரவாக இருந்தாலும், காங்கிரசை மட்டும் திமுக விட்டுக்கொடுக்காது. டெல்லியில் லட்சக்கணக்கில் தமிழர்கள் வசிக்கின்றனர். சட்டசபை தேர்தலையொட்டி அவர்களின் ஒட்டுகளை கவர தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை, தமாகா தலைவர் ஜிகே வாசன் உள்ளிட்ட பலர் பிரசாரம் செய்ய உள்ளனர். அதே போல் காங்கிரசுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் டெல்லியில் பிரசாரம் செய்ய செல்வார்களா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஜன 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை