ஆம் ஆத்மி - பாஜ இடையே வெடித்த போஸ்டர் போர் | Poster war | AAP vs BJP | Assembly election | Delhi
70 சட்டசபை தொகுதிகள் கொண்ட டில்லியில் பிப்ரவரி 5ல் ஒரே கட்டமாக- தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தல் களத்தில் ஆளும் ஆம் ஆத்மி, பாஜ, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஆளும் ஆம் ஆத்மியும் காங்கிரஸும் வேட்பாளர்களை அறிவித்த நிலையில் பாஜ 2 கட்ட வேட்பாளர்களை அறிவித்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் 2 வாரங்களே இருக்கும் சூழலில், ஆம் ஆத்மி, பாஜ இடையே போஸ்டர் மோதல் தீவிரமடைந்துள்ளது. முதலில் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை விமர்சித்து பாஜ ஒரு போஸ்டரை வெளியிட்டது. அது மக்கள் மத்தியில் கடும் பேசு பொருளான நிலையில், அதற்கு பதிலடியாக பாஜ தலைவர்களை விமர்சித்து ஆம் ஆத்மியும் போஸ்டர் வெளிட்டுள்ளது. பாஜ வெளியிட்ட போஸ்டரில் அரவிந்த் கெஜ்ரிவால் கிரீடம் அணிந்து, சூட் பாக்கெட்டில் மது பாட்டில், கையில் மதுபான கிளாசுடன் இருந்தார். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவால் கைதாகி சிறை சென்று ஜாமீன் பெற்றதை கேலி செய்யும் வகையில் இந்த போஸ்டரை பாஜ சித்தரித்திருந்தது. பேக்ரவுண்டில் மது கடைகள், நெரிசலான தண்ணீர் டேங்கர்கள், காற்று மாசு, யமுனையில் நச்சு நுரை, சாலைகளை மூழ்கடித்த வெள்ள காட்சிகளின் படங்களும் இடம்பெற்றன.