உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கடும் பனியிலும் களைகட்டும் போகி: கொண்டாட்ட காட்சிகள் | Bhogi | Bhogi 2025

கடும் பனியிலும் களைகட்டும் போகி: கொண்டாட்ட காட்சிகள் | Bhogi | Bhogi 2025

கடும் பனியிலும் களைகட்டும் போகி: கொண்டாட்ட காட்சிகள் | Bhogi | Bhogi 2025 தமிழகம் முழுதும் நாளை பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. மார்கழி மாதத்தின் கடைசி நாளான இன்று போகி பண்டிகையை மக்கள் வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் பழைய பொருட்களை எரித்து போகி பண்டிகையை கொண்டாடினர். சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டை, ராஜாகடை உள்ளிட்ட பகுதியில் அதிகாலையிலேயே மக்கள் வீட்டில் இருந்த பழையை பொருட்களை எரித்தனர். தெருக்களில் சிறுவர்கள் மேள, தாளங்களுடன் ஊர்வலமாக சென்றனர். போகி பண்டிகையின் போது கடந்த ஆண்டுகளை போல விமான போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படலாம் என்பதை கருதி விமானங்களின் புறப்பாடு, வருகை நேரங்கள் முன்கூட்டியே மாற்றி அமைக்கப்பட்டன. அதன்படி 30-க்கும் மேற்பட்ட வருகை, புறப்பாடு விமானங்களின் நேரங்கள் மாற்றி அமைக்கப்பட்டன. டில்லி, பெங்களூரில் இருந்து சென்னைக்கு வர வேண்டிய 3 இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. புகை மற்றும் பனிமூட்டம் அதிகமானால், சென்னைக்கு வரும் விமானங்களை வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பவும் விமான நிலைய அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர். புகை மற்றும் பனி மூட்டத்தால் சென்னை மாநகரமே புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டன. புதுச்சேரியிலும் போகி பண்டிகை கொண்டாடப்பட்டது. அதிகாலை முதலே வீட்டின் முன்பு பழை பொருட்களை மக்கள் தீயிட்டு எரித்தனர். இதனால் புதுச்சேரி முழுதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.

ஜன 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ