உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 129 வயதில் துறவி! மகா கும்பமேளாவில் அதிசயம் Mahakumbh Mela | mahakumbha 2025 | prayagraj maha kumbh

129 வயதில் துறவி! மகா கும்பமேளாவில் அதிசயம் Mahakumbh Mela | mahakumbha 2025 | prayagraj maha kumbh

129 வயதில் துறவி! மகா கும்பமேளாவில் அதிசயம் Mahakumbh Mela | mahakumbha 2025 | prayagraj maha kumbh உலகிலேயே அதிக மக்கள் கூடும் ஆன்மிக விழா என்றால் அது கும்பமேளா தான். வழக்கமாக 4 ஆண்டுக்கு ஒரு முறை கும்ப மேளா வரும். அதுவே 6 ஆண்டுக்கு ஒரு முறை என்றால் அர்த்த கும்ப மேளா, 12 ஆண்டுக்கு ஒரு முறை வருவது பூர்ண கும்பமேளா. இப்போது வந்திருப்பது மகா கும்பமேளா. 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே வரும் அரிதான நிகழ்வு. கும்ப மேளாவின் போது புனித நீராடினால் மோட்சம் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இப்போது நடப்பது மகா கும்ப மேளா என்பதால், கங்கையில் 45 கோடி பக்தர்கள் புனித நீராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. துவக்க விழாவையொட்டி உலகிலேயே வயதான புனித துறவியாக கருதப்படும் ஷிவானந்த சரஸ்வதி சுவாமி வருகை தந்தார். அவருக்கு இப்போது 129 வயதாகிறது என்று அவரது சீடர்கள் கூறுகின்றனர். 100 ஆண்டுகளாக கும்ப மேளாவுக்கு தவறாமல் வருகை தருகிறார். ஷிவானந்த சரஸ்வதி சுவாமியை பார்த்ததும் அவரிடம் ஆசி பெற பக்தர்கள் முண்டியடித்தனர். ஒவ்வொரு கும்பமேளாவுக்கும் தவறாமல் வந்து விடுவேன். வாழ்க்கையில் எனக்கென்று எந்த ஆசையும் விருப்பமும் கிடையாது. கடைசி மூச்சு வரை ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்பது மட்டும் தான் என் லட்சியம் என்று ஷிவானந்த சரஸ்வதி சுவாமி கூறினார். 129 வயதிலும் சுவாமி ஆரோக்கியமாக இருப்பதன் ரகசியத்தை அவரது பெண் சீடர் ஷர்மிளா சின்ஹா விளக்கினார். ஒவ்வொரு நாளையும் திட்டமிட்டு சரியாக செயல்படுவதை வழக்கத்தில் வைத்திருப்பவர் சுவாமி. அதிகாலை 3 மணிக்கெல்லாம் எழும்பி விடுவார். முதல் வேலையாக தியானம் செய்வார். பின்னர் கடவுளை ஆராதிப்பார். யோகா செய்வார். அவித்த உணவு வகைகளை மட்டுமே சாப்பிடுவார் என்று ஷர்மிளா சொன்னார்.

ஜன 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை