உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: வாடிவாசலில் சீறும் காளைகள் | Avaniyapuram Jallikattu | Jallikattu | Madura

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: வாடிவாசலில் சீறும் காளைகள் | Avaniyapuram Jallikattu | Jallikattu | Madura

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: வாடிவாசலில் சீறும் காளைகள் | Avaniyapuram Jallikattu | Jallikattu | Madurai பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் மதுரையில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும். இன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி அறிவித்தபடி தொடங்கியது. போட்டியில் கலந்து கொள்ளும் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. காளையின் உடல்நிலை எப்படி உள்ளது, அதன் வயது, ஊக்க மருந்து ஏதேனும் பயன்படுத்தப்பட்டு உள்ளதா, கொம்பின் அளவு உட்பட அனைத்தும் சரிபார்க்கப்பட்ட பின்னரே களத்தில் இறக்கிவிடப்பட்டது. தொடர்ந்து மதுரை கலெக்டர் சங்கீதா முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர். அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். வாடிவாசலில் இருந்து சீறிபாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கினர். ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு கிட்டத்தட்ட 2000 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வாடிவாசலில் இருந்து 1,100 காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்படுகின்றன. காளைகளை அடக்க 900 மாடுபிடி வீரர்கள் பெயர்களை முன்பதிவு செய்திருந்தனர். ஒவ்வொரு மணி நேரத்துக்கும் என 100 காளைகள் களத்தில் இறக்கிவிடப்பட உள்ளது.

ஜன 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி