உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பொள்ளாச்சி சர்வதேச பலூன் திருவிழா அசத்தல் காட்சி | TNIBF Pollachi | Hot air balloon

பொள்ளாச்சி சர்வதேச பலூன் திருவிழா அசத்தல் காட்சி | TNIBF Pollachi | Hot air balloon

பொள்ளாச்சி சர்வதேச பலூன் திருவிழா அசத்தல் காட்சி | TNIBF Pollachi | Hot air balloon கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழா கோலாகலமாக தொடங்கியது. தொடர்ந்து பத்தாவது ஆண்டாக ஆச்சிபட்டி மைதானத்தில் பலூன் திருவிழா நடக்கிறது. அமெரிக்கா,பிரிட்டன், ஆஸ்திரேலியா, பிரேசில் ,பெல்ஜியம், ஜப்பான், தாய்லாந்து உள்ளிட்ட 8க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து ராட்சச பலூன்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. பலூன்களில் வெப்பகாற்று நிரப்பப்பட்டு அவை வானில் பறக்கவிடப்பட்டுள்ளது. பயிற்சி பெற்ற பைலட்கள் வெப்ப காற்று பலூன்களில் ஏறி பயணம் செய்ததை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பார்த்தனர். தஞ்சை பெரிய கோயில் வடிவிலான பலூன், யானை,கரடி,புலி என பல்வேறு வடிவில் அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் விதவிதமான பலூன் பறக்க விடப்பட்டுள்ளது. வரும் 16ம் தேதி வரை பலூன் திருவிழா நடக்க உள்ளது விழா ஏற்பட்டாளர்கள் கூறினர். வெப்ப காற்று பலூன் திருவிழாவை காண வரும் பயணிகள் பொள்ளாச்சியை சுற்றி பார்க்க ஹெலிகாப்டர் சவாரிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜன 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ