உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மகளுக்காக சைக்கிளில் பொங்கல் சீர் கொண்டு செல்லும் தந்தை | Pongal 2025 | Pongal celebration

மகளுக்காக சைக்கிளில் பொங்கல் சீர் கொண்டு செல்லும் தந்தை | Pongal 2025 | Pongal celebration

பொங்கல் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் என்றாலே பாரம்பரியமாக பொங்கல் சீர் கொடுக்கும் முறை இன்றும் வழக்கத்தில் உள்ளது. அந்த வகையில் புதுக்கோட்டையில் நடக்கும் சம்பவம் அனைவரது கவனத்தை ஈர்க்கிறது. புதுக்கோட்டை வடக்கு கொத்தகோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லத்துரை வயது 81. மனைவி அமிர்தவள்ளி. இவரது மகள் சுந்தராம்பாள். 23 ஆண்டுகளுக்கு முன் நம்பம்ட்டியில் திருமணம் செய்து கொடுத்தனர். 81 வயதிலும் தேங்காய் பழம், மஞ்சள் கொத்து வேட்டி, துண்டு, பச்சரிசி, வெள்ளம், தலையில் கரும்பு கட்டு என சைக்கிளில் பொங்கல் சீர் கொடுக்க சென்று வருகிறார் செல்லத்துரை. 17 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளிலேயே அவர் செல்வதை ஊர் மக்கள் வியப்புடன் பார்க்கின்றனர்.

ஜன 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ