முதல்வர் ஸ்டாலின் - ப.சிதம்பரம் சந்திப்பு பின்னணி? MK Stalin | DMK | P. Chidambaram | Congress
முதல்வர் ஸ்டாலினை அவரது ஆழ்வார்பேட்டை இல்லத்தில், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று திடீரென சந்தித்து பேசினார். இது குறித்து சிதம்பரம் ஆதரவாளர்கள் கூறியதாவது: பொங்கல் தினத்தை ஒட்டி, முதல்வருக்கு சிதம்பரம் வாழ்த்து தெரிவித்தார். சிதம்பரத்தின் தாய் லட்சுமியின் நினைவாக, லட்சுமி வளர்தமிழ் நூலகம் என்ற பெயரில் நுாலகம் அமைக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் 13 கோடி ரூபாய் செலவில் இந்த நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள அண்ணா நூலகத்திற்கு அடுத்தபடியாக, பெரியதாக இந்த நூலகம் கருதப்படுகிறது. இந்த நூலகத்தை, அழகப்பா பல்கலைக்கழகத்திடம் அர்ப்பணிக்கும் விழா, வரும் 21ம்தேதி காரைக்குடியில் நடக்கவுள்ளது. நூலகத்தை ஸ்டாலின் திறந்து வைக்கிறார். சிதம்பரம், அவரது மகன் கார்த்தி, பாடலாசிரியர் வைரமுத்து, தமிழறிஞர்கள், பல்கலைக்கழகங்களின் முன்னாள் வேந்தர்கள் சிலர் பங்கேற்க உள்ளனர்.