பண மோசடி தடுப்பு சட்டத்தில் அமலாக்கத்துறை அதிரடி vaithilingam, former minister| ED| admk
பண மோசடி தடுப்பு சட்டத்தில் அமலாக்கத்துறை அதிரடி vaithilingam, former minister| ED| admk 2011 முதல் 2016 வரை அதிமுக ஆட்சி காலத்தில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்தவர் வைத்திலிங்கம். இப்போது ஓ.பன்னீர்செல்வம் அணியில் உள்ளார். இவர் அமைச்சராக பதவி வகித்தபோது, குடியிருப்புகள் கட்டுவதற்கு திட்ட அனுமதி வழங்குவதற்காக தனியார் நிறுவனத்திடம் ரூ.27.90 கோடி லஞ்சம் பெற்றதாகவும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் புகார்கள் எழுந்தன. அதன்பேரில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இதில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்திருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை தனியாக வழக்கு பதிந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வைத்திலிங்கத்தின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 10 இடங்களில் நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த சூழலில் பண மோசடிதடுப்பு சட்டத்தின் கீழ் வைத்திலிங்கத்துக்கு சொந்தமான ரூ.100.92 கோடி மதிப்புள்ள 2 அசையா சொத்துகள் அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டு உள்ளது.