உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அரசு பஸ்சில் ஜன்னல் ஓரம் பயணித்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம் | Vehicle hit the bus | Woman affected |

அரசு பஸ்சில் ஜன்னல் ஓரம் பயணித்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம் | Vehicle hit the bus | Woman affected |

அரசு பஸ்சில் ஜன்னல் ஓரம் பயணித்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம் | Vehicle hit the bus | Woman affected | Injury to fingers | Vellore | ராணிப்பேட்டை மாவட்டம் காவனூரைச் சேர்ந்தவர் தனலட்சுமி, வயது 25. தனது கை குழந்தையுடன் ஆற்காட்டில் இருந்து காஞ்சிபுரத்துக்கு அரசு பஸ்சில் சென்றார். ஜன்னல் ஓரம் உட்கார்ந்திருந்த தனலட்சுமி, ஜன்னல் கம்பியை பிடித்தபடி சென்றார். வாலாஜா அரசு மகளிர் கல்லூரி அருகில் சென்றபோது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் அரசு பஸ்சை உரசியபடி சென்றது. இதில் தனலட்சுமி வலது கையின் மூன்று விரல்கள் துண்டாகி கீழே விழுந்தது. வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார். இவரது அலறல் சத்தம் கேட்டு டிரைவர் பஸ்சை நிறுத்தினார். துண்டாகி விழுந்த 3 விரல்களை தேடி எடுத்து தனலட்சுமியை விரல்களுடன் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், அரசு பஸ்சில் உரசிய வாகனம் எது என்று அங்குள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரிக்கின்றனர். பஸ் பயணத்தில் இளம்பெண்ணின் மூன்று விரல்கள் துண்டான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜன 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !