மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜியும் அதிருப்தி | RG kar case verdict | Junior doctors protest
மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜியும் அதிருப்தி | RG kar case verdict | Junior doctors protest | Punishment not enough | Kolkata கொல்கத்தா ஆர்ஜி கர் அரசு மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 9ல், 31 வயது பெண் பயிற்சி டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த கொடூர சம்பவத்தில் கொல்கத்தா போலீசில் தன்னார்வலராக வேலை பார்த் சஞ்சய் ராய் என்பவன் கைது செய்யப்பட்டான். இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில், சஞ்சய் ராய் ஒற்றை ஆளாக இந்த கொடூரத்தை செய்ததை சிபிஐ உறுதி செய்தது. சஞ்சய் ராய் மீது கொல்கத்தா சிபிஐ கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அனிர்பன் தாஸ், சஞ்சய் ராய் குற்றவாளி என்று 2 நாள் முன்பு தீர்ப்பளித்தார். திங்களன்று தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என்றும் கூறி இருந்தார். அதன்படி சஞ்சய் ராய் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டான். முன்னதாக சஞ்சய் ராய்க்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று சிபிஐ வலியுறுத்தியது. ஆனால் அவனுக்கு ஆயுள் தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி அனிர்பன் தாஸ் தீர்ப்பளித்தார். ஆயுள் தண்டனையை சாகும் வரை சிறையில் கழிக்க வேண்டும் என்று உத்தரவில் குறிப்பிட்டார். பாதிக்கப்பட்ட பயிற்சி டாக்டர் குடும்பத்துக்கு மேற்கு வங்க அரசு 17 லட்சம் ரூபாய் நிவாரணம் கொடுக்க வேண்டும் என்றும் நீதிபதி கூறினார். ஆனால் இந்த நிவாரணத்தை பெண் டாக்டர் குடும்பம் நிராகரித்து விட்டது. தீர்ப்பை கேட்டு நாங்கள் அதிர்ச்சியடைந்துள்ளோம் என படுகொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் தாயார் கூறினார். இது அரிதிலும் அரிதான வழக்கு அல்லவா? பணியில் இருந்த மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். நாங்கள் திகைத்து போயுள்ளோம். இந்த குற்றத்துக்கு பின்னால் ஒரு பெரிய சதி இருந்தது என்றார். ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்து நீதிக்கான போராட்டத்தை தொடருவோம் என்று இறந்த பெண் மருத்துவரின் தந்தை கூறினார் இந்த சம்பவத்தில் மற்ற அனைத்து குற்றவாளிகளும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படும் வரை ஓயமாட்டோம் என்றார். சஞ்சய் ராய்க்கு கொல்கத்தா சிறப்பு கோர்ட் வழங்கிய ஆயுள் தண்டனை தீர்ப்பு, பல்வேறு தரப்பிலும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. தீர்ப்பு வழங்கிய கோர்ட்டுக்கு வெளியே ஜூனியர் மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர். குற்றவாளிக்கு கடுமையான, முன்மாதிரியான தண்டனை கிடைக்க வேண்டும். இந்த தண்டனை போதாது. இன்னும் கடுமையான தண்டனை கோரி ஐகோர்ட்டுகளுக்கு செல்வோம் என்றும் கூறினர். கொல்கத்தா கோர்ட் வழங்கிய தீர்ப்பு அதிர்ச்சி அளிப்பதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜியும் அதிருப்தி தெரிவித்துள்ளார். இது மரண தண்டனை அளிக்கும் அளவு கொடூரமான குற்றம் என்பதை நான் உறுதியாக உணர்கிறேன். குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்கக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடருவோம் என்றும் கூறியுள்ளார்.