மக்களை மிரட்டிய புரோக்கர்: பொங்கி எழுந்த பாஜ எம்பி Etala rajendhar bjp mp slaps real estate broker
மக்களை மிரட்டிய புரோக்கர்: பொங்கி எழுந்த பாஜ எம்பி Etala rajendhar bjp mp slaps real estate broker encroaching poor people lands Telangana viral video MP warning against land brokers தெலுங்கானா மாநிலத்தில் பாஜவுக்கு 8 லோக்சபா எம்பிக்கள் உள்ளனர். மல்காஜ்கிரி தொகுதி எம்பியாக இருப்பவர் ஈட்டல ராஜேந்தர். தனது தொகுதிக்கு உட்பட்ட போச்சாரம் Pocharam பகுதியில் ஈட்டல ராஜேந்தர் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். ரியல் எஸ்டேட் அதிபர்கள் பலவழிகளில் தங்களது நிலங்களை அபகரிப்பதாக மக்கள் புகார் கூறினர். போலி பத்திரங்களை தயார் செய்து மிரட்டி குறைந்த விலைக்கு நிலங்களை பிடுங்கிக் கொள்ளும் சம்பவங்களும் நடக்கிறது என எம்பியிடம் கூறினர். இப்போது கூட, ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தைச் சேர்ந்த புரோக்கர், ஊருக்குள் வந்து மக்களை மிரட்டிக் கொண்டிருப்பதாக கூறினர். அதைக் கேட்டதும் ஆவேசமான எம்பி ஈட்டல ராஜேந்தர், புரோக்கர் இருக்கும் இடத்துக்கு பாஜ நிர்வாகிகளுடன் விரைந்து சென்றார். அப்பாவி பொதுமக்களிடம் நிலத்தை விலைக்கு கேட்டு பஞ்சாயத்து பேசிக் கொண்டிருந்த அந்த நில புரோக்கரை, அனைவர் முன்னிலையிலும் பளார் என அறைந்தார். புரோக்கர் கன்னத்தில் எம்பி கையை வைத்ததும் மக்களும் பொங்கி எழுந்தனர். பல நாளாக அட்டூழியம் செய்த அந்த புரோக்கருக்கு தர்ம அடி கொடுத்தனர். அவர்களை ஈட்டல ராஜேந்தர் சமாதானப்படுத்தினார். இத்தோடு நிறுத்திக்கணும்; தொடர்ந்து அப்பாவிகளை ஏமாற்றி நிலத்தை பிடுங்க பார்த்தால் என் நடவடிக்கை கடுமையா இருக்கும்; இது எல்லா புரோக்கர்களுக்கும் நான் கொடுக்கற வார்னிங் என புரோக்கரை எம்பி ஈட்டல ராஜேந்தர் எச்சரித்தார். புரோக்கரை கிராம மக்கள் ஊர் எல்லை வரை விரட்டி விரட்டி அடித்தனர். ரியல் எஸ்டேட் புரோக்கர்களின் அடாவடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அதிரடி நடவடிக்கையில் இறங்கிய பாஜ எம்.பி. ஈட்டல ராஜேந்தருக்கு பாராட்டு குவிகிறது.